நாயொன்றிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த மானை, ஹல்துமுள்ளைப் பொலிஸார் காப்பாற்றி, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம், இன்று (04) இடம்பெற்றுள்ளது.
ஹல்துமுள்ளை காட்டுப்பகுதியிலிருந்த மானொன்று வயல் வெளிக்கு வந்தபோது, அம்மானை நாயொன்று துரத்த ஆரம்பித்ததையடுத்து, குறித்த மான், பாதுகாப்புக்காக, இறுதியாக, ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையத்துக்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மானுக்கு சிகிச்சை அளித்த பொலிஸார், அந்த மானை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
(செல்வராஜா)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.