இலங்கையில் ஏற்பட்ட முஸ்லிம்களிற்கு எதிரான இன வன்முறையை தடுப்பதில் பேஸ்புக் நிறுவனம் உரிய பங்களிப்பை செய்யாமைக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் நடத்திய உள்ளக விசாரணை அறிக்கையில் “சில நாடுகளில் இடம்பெற்ற வன்முறை, மனித உரிமை மீறல்களில் பேஸ்புக் நிறுவனத்தின் குறைபாடுகளும் பங்களிப்பு செய்தது” என்று குறிப்பிட்டதை அடுத்து, நேற்று பேஸ்புக் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

இந்தோனேசியா, கம்போடியா, இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் நடத்திய மீளாய்வு அறிக்கையில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு, இலங்கையில் முஸ்லிம் உணவகத்தின் உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக பொய்யாக குறிப்பிட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இலங்கை தொடர்பான அறிக்கையை அங்கீகரிக்கிறோம். மன்னிப்பு கோருகிறோம். அதை சரிசெய்ய விரும்புகிறோம்” என பேஸ்புக் அறிவித்துள்ளது.

நன்றி - மடவளை நியூஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.