அரச உழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமான அளவு பணம் திறைசேரியில் இருந்தாலும், சட்ட சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் பணத்தை வழங்குவதற்கு திறைசேரி அதிகாரிகள் தயங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை வழங்குவதுற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரையில் சட்ட சிக்கல்கள் இருக்கவில்லை எனவும் அதன் பின்னர் திறைசேரியிலிருந்து பணம் எடுத்து சம்பளம் வழங்குவதானது அதிகாரிகள் சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கு நிகரானது எனவும் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளங்களை வழங்குவதற்காக நாடாளுமன்றில் அனுமதி பெற்றுக்கொள்ளாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Kamel)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.