பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த, கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
COVID  -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 200 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக பிரதமரின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.COVID -19 அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உளவுப் பிரிவினரும் விளக்கமளித்தனர்..
பிரதம அமைச்சரின் செயலாளர் காமினீ செனரத், நிதியமைச்சரின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், சுகாதாரத் துறை சார்ந்த தலைவர்கள், பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட COVID -19 ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்..
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.