ஹோமாகமவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாரிய கிரிக்கட் மைதானம் தொடர்பில் பிழையான தகவலை வெளியிட்டமைக்காக தாம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிதி உதவியின் கீழ் ஹோமாகமவில் பாரிய கிரிக்கட் மைதானம் அமைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியதாக தாம் வெளியிட்ட கருத்து பிழையானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த மைதானம் அமைப்பதற்கான நிதி சர்வதேச கிரிக்கட் பேரவையினால் வழங்கப்படுவதாக தாம் வெளியிட்ட கருத்து, பந்துல குணவர்தனவின் தகவல்களின் அடிப்படையிலானது எனவும் அதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மைதானம் அமைப்பதற்கு எவ்வித நிதி உதவியையும் வழங்குவதாக தாம் உறுதியளிக்கவில்லை என சர்வதேச கிரிக்கட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

(தமிழ்வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.