முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ஜனாஸா விடயத்தில் தலையிடுவதை கண்டித்தும், அவரை விமர்சித்தும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளதாக போலிச் செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

ரவூப் ஹக்கீம் அவர்களை இலக்குவைத்து, அவரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் விஷமிகள் சிலர்
திட்டமிட்ட முறையில் இப்படியான போலிச் செய்திகளை பரப்பிவருகின்றனர்.

இந்த போலிச் செய்தியை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதுடன், போலிச் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அல்லது அதன் தலைவர் வெளியிடும் அறிக்கைகள்/ செய்திகள் அலுவலக கடித தலைப்புடன் எங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் இணையத்தளத்தில் மாத்திரமே வெளியிடப்படும்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்கு, கீழுள்ள எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்று இணையத்தளத்துக்கு விஜயம் செய்யுங்கள்.

https://www.facebook.com/RauffHakeemOfficial

https://www.facebook.com/SLMCPartyOfficial

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகப் பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.