இலங்கையில் இன்றைய தினம் (06) மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 774 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்கள் மூவரும் வெலிசரை கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடற்படையை சேர்ந்த 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் இதுவரை 550 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதுடன் 212 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.