பத்தாவது தொடர்..............

அல்-குர்ஆனில் யூதர்களின் பூர்வீகமும், இறைதூதுவர்களை கொலை செய்தமையும், இறைவனால் சபிக்கப்பட்டமையும் 


யூதர்கள் உலகத்தில் நடாத்திவருகின்ற கொலைக்களங்களை இந்த தொடரில் கூறுகின்றபோது யூத சமூகத்தின் பூர்வீகம் பற்றிய வரலாற்று தகவல்களை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு இங்கே வழங்குவது சிறந்தது.

நபிமார்களில் பெரும்பாலானவர்கள் யூத சமூகத்தில் இருந்து அச்சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கே இறைவன் அனுப்பிவைத்தான். அவ்வாறான நபிமார்கள் பலரை யூதர்கள் கொலை செய்தார்கள்.

அதில் மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பிரதேசங்களில் மாத்திரம் சுமார் எழுபது நபிமார்கள் யூதர்களால் கொலை செய்யப்பட்டார்கள். 

அதில் நபி ஜகரிய்யா, நபி யஹ்யா ஆகியோரும் அடங்குவார்கள். இதில் நபி யஹ்யா அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் தொழுதுகொண்டு இருக்கும்போது தலையை வெட்டி கொண்டு சென்றிருந்தார்கள்.

அதே செயலைத்தான் இன்றும் யூதர்கள் அங்கு செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அன்று வாளால் வெட்டினார்கள். இன்று நவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றார்கள்.

அதுபோல் யூத சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஈசா நபியையும் பல வழிகளில் துன்புறுத்தினார்கள்.
இறைவனின் அத்தாட்சியான பல அற்புதங்களை அவர் காண்பித்திருந்தும், குதர்க்கம் பேசுபவர்களாகவே இருந்தார்கள்.

அத்துடன் அவரை கொலைசெய்ய எடுத்த முயற்சியினால் நபி ஈசா அவர்கள் இறைவனால் உயர்த்தப்பட்டார்.   

இப்ராஹீம் நபி அவர்களின் பேரனும், இஸ்ஹாக் நபியின் புதல்வருமான யெஹ்கூப் நபியின் இன்னுமொரு பெயர்தான் இஸ்ராயீல். இவருக்கு பன்னிரண்டு குழந்தைகள். அதில் மூத்த புதல்வரின் பெயர் எஹுதா (அதாவது யூதர்) பதினோராவது குழந்தைதான் நபி யூசூப்.

இந்த பன்னிரண்டு குழந்தைகளையும் பனு இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அதாவது யூத சமூகம் இவர்களிலிருந்துதான் தோன்றுகின்றது. இவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் அன்றைய சிரியா (சாம்) நாட்டின் பாலஸ்தீனில் உள்ள “ஹிப்ரான்” நகரில் ஆகும். 

குழந்தையாக இருந்த நபி யூசூப் அவர்கள், தனது சகோதரர்களால் பாலாங் கிணற்றில் வீசப்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் யூதர்கள் ஓர் இரக்கமற்ற சமூகமாகவே வாழ்கின்றார்கள்.     

எகிப்து நாட்டுக்கு நபி யூசூப் அவர்கள் அரசரானதும், பலஸ்தீனில் வாழ்ந்த தந்தை யெஹ்கூப் நபி, தனது சகோதரர்கள் உற்பட குடும்பத்தில் உள்ள 83 பேர்கள் எகிப்தில் குடியேறினார்கள்.

பின்பு காலங்கள் செல்லச்செல்ல நபி யெஹ்கூபின் சந்ததிகள் இலட்சக்கணக்கில் பெருகி இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தார்கள். இவர்கள்தான் யூத சமூகத்தினர்.

நபி யூசுப்பின் மறைவுக்கு பின்பு அவர்களது சகோதர்களே எகிப்தை ஆட்சி செய்தார்கள். பின்பு எகிப்தின் ஆட்சி பூர்வீக குடிகளான பிர்அவுன்களின் கைகளுக்கு வந்தது.

நபி மூஸா அவர்களையும், அவரது சமூகத்தினரான யூதர்களையும் பிர்அவுனின் படைகள் துரத்தியபோது, சுமார் ஆறு இலட்சம் யூதர்கள் பிளக்கப்பட்ட செங்கடல் வழியாக பாலஸ்தீன் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அதாவது பிர்அவுனிடமிருந்து யூதர்களை இறைவன் காப்பாற்றினான்.

யூத பரம்பரையை சேர்ந்தவர்கள் பல நூறு வருடங்களுக்கு பின்பு பாலஸ்தீன் பிரதேசத்துக்கு வந்ததனால் அவர்களுக்கு ஊரோ, நாடோ அங்கு இருக்கவில்லை. அதனால் அந்த ஊரை பெற்றுக்கொள்வதற்காக அங்குள்ளவர்களுடன் போர் செய்யுமாறும் உங்களுக்கு வெற்றியை தருவதாகவும் இறைவன் வாக்குறுதி வழங்கினான்.

ஆனால் எங்களால் யுத்தம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் நீங்களும், உங்களது இறைவனும் யுத்தம் செய்யுங்கள் என்று மூஸா நபியிடம் யூதர்கள் கூறியதன் மூலம் இறைவனின் கட்டளையை மறுத்துவிட்டனர். அத்துடன் இறைவன் பிர்அவுனிடமிருந்து காப்பாற்றியதனயும் நன்றி மறந்துவிட்டனர். 

இதனால் யூதர்களை நாப்பது வருடங்கள் நாடற்றவர்களாக அங்குமிங்கும் இறைவன் அலையவிட்டான். அப்போது யூதர்களுக்கு இறைவன் மேகத்தை நிழலாக வழங்கியதுடன், அவர்களுக்கு “மண்உசல்வா” என்னும் உணவையும் வழங்கினான்.   

இறைவனின் உதவியையும், அத்தாட்சிகளையும், அற்புதங்களையும் நேரடியாக கண்டிருந்தும் நபி மூஸா ஊரில் இல்லாதபோது யூதர்கள் காளைக் கன்றினை வணங்கினார்கள். 

துர்சினாய் மலையில்வைத்து நபி மூஸாவுக்கு தௌராத் வேதமும், பத்து கட்டளைகளும் வழங்கியபோதும், நாங்கள் அல்லாஹ்வை நேரடியாக காணவில்லையென்று கூறி அதனை மறுத்தார்கள்.

பின்பு எழுபது யூதர்களை அழைத்துக்கொண்டு இறைவனை சந்திக்க மீண்டும் சென்றபோது இறைவன் பேசியதை கேட்டிருந்தும், உங்கள் இறைவனை கண்களால் காணவில்லையே என்று கூறினார்கள்.

இவ்வாறு முறண்பாடுடையவர்களாகவும், பொய் கூறுபவர்களாகவும், வாக்குறுதி மாறுபவர்களாகவும், ஒப்பந்தங்களை மீறுபவர்களாகவும், சதி செய்பவர்களாகவும், தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.

ரசூலுல்லாவின் தலைமையில் மதினாவில் நடைபெற்ற “ஹந்தக்” யுத்தத்தின்போது மதீனாவை சூழ இருந்த யூதர்கள் ஒப்பந்தனகளை மீறி மக்காவாசிகளுக்கு உதவி செய்ததன் மூலம் முஸ்லீம்களுக்கு சதி செய்தார்கள்.

இவ்வாறு யூத சமூகம் தோன்றியதிலிருந்து தொடர்ந்த இந்த உலகில் குழப்பக் காரர்களாகவே இருந்து வருகின்றார்கள். இதனால் இறைவன் யூதர்களை சபித்துள்ளான்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

தொடரும்......................................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.