ரமழானை முன்னிட்டு சம்மாந்துறையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வை.பி.எம் அஸ்மியினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு !

கொடிய கொரோனா நோயிலிருந்து இந்நாட்டு மக்களை பாதுகாக்கும் முகமாக அரசினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்யும் ஏழை குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்களது புனித ரமழான் மாதத்தில் பல வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் மஹல்லாக்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய 125 குடும்பங்களுக்கு இன்று (14) உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சகோதரர் வை.பி.எம் அஸ்மி (ஆசிய அபிவிருத்தி வங்கி - ADB) அவர்களின் ஏற்பாட்டின் மூலம் குறித்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை குறித்த நபர் இதற்கு முன்னரும் இன்னல்களை எதிர்நோக்கிய பல மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Akeel Shihab)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.