ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளரும், பேரரறிஞருமான கலாநிதி எம்.ஐ.எம்.சுக்ரி அவர்களின் மறைவு குறித்து சியன ஊடக வட்டம் தம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

சியன ஊடக வட்டம் சார்பில் அதனது தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் அவர்கள் வெளியிட்டுள்ள அனுதாப செய்தி:

 மறைந்த பேரறிஞர் கலாநிதி எம்.ஐ.எம்.சுக்ரி அவர்களது இழப்பு இஸ்லாமிய உலகுக்கே பேரிழப்பாகும். அன்னார் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில், "இமாம் கஸ்ஸாலியின் தத்துவ வித்துக்கள் (இஹ்யா உலூமுத்தீன்)" - 1982 முதல் 1992 வரையான 10 வருடங்கள், பிறகு 1992 முதல் 2000 வரை "இமாம் ரூமியின் சிந்தனைகள் - தொடர் பேச்சு" நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தார். இந்த நிகழ்ச்சியினை மர்ஹும் எம்.ஏ.எம்.மொஹமட் அவர்களுக்குப் பிறகு நான் தான் பொறுப்பெடுத்து நடாத்தினேன். அதன் பிறகு அவர்களுடைய நோன்பு, ஹஜ் கால விசேட உரைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கினேன்.

கலாநிதி சுக்ரி அவர்கள் எவ்வளவு வேலைப்பளுக்கள் இருந்தாலும், நாம் கேட்டுக்கொண்ட போதெல்லாம் சன்மானம் இல்லாமல் நிகழ்ச்சிகளை வழங்கி செல்வார். வெளிநாட்டுப்பயணங்கள் செல்ல வேண்டி இருந்தால் இரு மாதங்களுக்கு முன்பாகவே வந்து ஒலிப்பதிவுகளை செய்து விட்டு செல்வார். அன்னாருடைய இழப்பு இலங்கைக்கு மட்டுமன்றி இஸ்லாமிய உலகுக்கே பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நல்லமல்களை ஏற்றுக்கொண்டு ஜன்னதுல் பிர்தவ்ஸினை வழங்குவானாக!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.