2020 மே மாதம் 20 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே மாதம் 21 ஆம் திகதி) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சரவை பேச்சாளர்களான கௌரவ உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்;தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களும், கௌரவ பெருந் தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண அவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு:
• கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக வருமானங்களை இழந்தவர்களுக்கும் சமூர்த்தி பயனாளிகள் அடங்கலாக குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்காக ரூபா 5000ஃஸ்ரீ ஐ நிவாரண கொடுப்பனவாக செலுத்துவதற்காக 2500 இற்கும் 3000 கோடி ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை ஏப்ரல் மாதத்தில் ஒதுக்கீடு செய்ததாகவும் மே மாதத்திற்காக 51, 44046 பேருக்கு இந்த நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது. இதற்காக மே மாதத்திற்காக இதற்கென 25,720 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் போது கௌரவ பிரதமரினால் இதற்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியதுடன் இதற்காக ரூபா 16,000 மில்லியன் மேலதிக நிதியை பெற்றுக்கொள்வதற்காக , சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்காக குறுகிய கால கடனாக பெற்றுக்கொள்வதற்கும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. இNது போன்று இந்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதம் அமைச்சரவையினால் விசேட கவனத்தில் கொள்ளப்பட்டது.
 இதன்போது, இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் ஜுன் மாதத்தில் இந்த கொடுப்பனவு வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் தொடர்பில் மதிப்பளித்து ஜுன் மாதத்திற்காக இந்த கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் போது இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்கழுவின் ஆலோசனைக்கு அமைய பட்டதாரிகளுக்காக ரூபா 20 000ஃஸ்ரீ கொடுப்பனவு வழங்;குவதை இடைநிறுத்தி முன்மாதிரியாக செயல்பட்டமை தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
 கௌரவ உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்;தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்தரைக்கு அமைய ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வணிகப்பீடத்திற்கு கட்டிடத்தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 1619 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் மிகவும் குறைந்த தொகையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்த மேன்முறையீட்டை கவனத்தில் கொண்டு 1429 மில்லியன் ரூபாவிற்கான புதிய ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
• தற்பேரது பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இணையதளத்தினூடாக மேற்கொள்ளப்படுவதுடன் , இதன்போது இதற்கான கனணி உள்ளிட்ட வசதிகளை கொண்டிராத மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் இதற்கு தேவையான கனணிகளை இலங்கையில் தயாரிப்பதற்கான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
• கௌரவ விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அளகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் சுவசக்தி கடன் பரிந்துரை முறையின் கீழ் இளம் தொழிற்;துறையினருக்கு தற்பொழுது வழங்கப்படும் கடன்தொகையை ரூபா 2 இலட்சத்திலிருந்;து ரூபா 450,000 வரையில் அதிகரிப்பதுடன் ரூபா 50,000 மானியத்தை வழங்குதல்.
இதே போன்று தற்பொழுது மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் ரூபா 250,000 கடன்தொகையை 500,000 வரையில் அதிகரித்தல்.
• வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் தற்பொழுது உள்ள நிலைமையின் கீழ் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் 4,500 பேர் அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மேலும், சுமார் 41,000 பேர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்திருப்பதுடன், தனிமைப்படுத்தல் போன்ற விடயங்களின் அடிப்படையில் முறையாக இவர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அறிவித்தார்.
இதற்கமைவாக மே மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தோனேசியா, ரஷ்யா ,பங்களாதேஷ், கட்டார் மற்றும் பெரலஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கையர்களை மீள அழைத்துவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பின்னர் முக்கியத்தவ அடிப்படையில் மத்திய கிழக்கு மற்றும் மாலைத்தீவிலுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்கு மேலதிகமாக , சுமார் 4 040  பேர் குறுகிய கால விசா அடிப்படையில் வெளி நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. (இதற்காக விசேட விமானம் ஈடுபடுத்தப்படமாட்டாது.)
• கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை வருடம் 60 தொடக்கம் 61 ஆக நீடித்தல்.
இதன் போது, அதிமேதகு ஜனாதிபதியினால் வைத்திய சேவைக்கு மேலதிகமாக , சேவையின் அடிப்படையில் அனைத்து தொழில்நுட்ப துறையை உள்ளடக்கிய வகையில் இந்த ஓய்வுபெறும் வயதை தீர்மானிப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு பரிந்துரைத்தார்.
• கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியபாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு கிழக்கு ஆதாரவைத்தியசாலை 1.8 பில்லியன் ரூபா செலவில் மேம்படுத்துதல் .
• கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியபாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு ரிஜ்வே அம்மையார் சிறுவர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிக்கும் பணிகள் மேம்படுத்துதல்.
• கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியபாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் சுகாதார பணியாளர் சபைக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் துறையுடனான கூட்டு திட்டமொன்றின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளல்.
இதில் கௌரவ பிரதமரினால் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்குமாக காச்சல் நோயிற்காக விசேட வாட் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான ஆலோசனையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.