(எம்.மனோசித்ரா)

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தள (Online) முறை மூலம் பார்ப்பதற்காக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்களுக்கு மேலதிகமாக இலங்கையில் முதன் முறையாக உரிய பரீட்சை பெறுபேறுகளை அங்கீகரித்து உறுதி செய்து கொள்ளும் ஆவணங்கள் (Verification) வழங்கப்படும் இணையத்தள சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்படும் பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை இணையத்தள முறையில் பெற்றுக் கொள்வது இச்சேவையின் பிரதான இலக்காகும்.

இதன் முதற்கட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைக்குரிய பெறுபேற்றை உறுதி செய்யக்கூடிய ஆவணங்களை வழங்குவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் வெளிநாட்டு பல்கலைகழங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பரீட்சை விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அங்கீகரித்து உறுதி செய்த இந்த ஆவணங்கள் இணையத்தள முறையில் வழங்கப்படவுள்ளன.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்
www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியில் சென்று விண்ணப்பதாரர்கள் தமது பெறுபேற்றை உறுதி செய்து கொள்ள இந்த சேவையை பெற்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

21 ஆம் நூற்றாண்டின் 3ஆம் தசாப்தத்தில் நுழைகின்ற மாணவர்களுக்கு டீஜிட்டல் தொழிநுட்ப வசதிகளை அனுபவிக்க வாய்ப்புக்கள் இந்த சேவையை செயற்பாட்டு ரீதியில் யதார்த்தமாக்கிக் கொள்வதோடு, எதிர்காலத்தில் இந்நாட்டின் கல்வித்துறையில் பரீட்சை முறைமையில் போலவே வேறு துறைகளுக்கும் இந்த டிஜிட்டல் அனுபவத்தை மிகவும் செயற்பாட்டு ரீதியாக அண்மித்துக் கொள்ள இத்தகு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.