(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் திண்ம கழிவு முகாமைத்துவத்திற்காக வரி அறவீடு செய்யப்படுவது தொடர்பாக தெளிவூட்டும் முகமாக கல்முனை மாநகர சபையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் அவர்களினால் இன்று (17)இடம்பெற்றது. 

இங்கு கருத்து 
கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 
கடந்த ஒரு வாரமாக 
திண்ம கழிவு முகாமைத்துவம் செய்ய ஓரு நாளைக்கு 7 ரூபா வீதம் வாரத்திற்க்கு 50 ரூபாய் வரி அறவிடப்படுகின்றது.

இதனை நாங்கள் சட்ட திட்டத்திற்கு அமையவே இதனை அறவிடு மேற்கொண்டுவருகின்றோம். 

இருந்த போதும் 
இதனை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை செலுத்த வேண்டாமென பொது மக்களிடம் சொல்வதாக மேலும் இது தொடர்பாக சில சலசலப்பு ஏற்படுவதாக நாம் அறிகின்றோம். இது தொடர்பாக நாம் பொதுமக்களுக்கு ஏற்கனவே தெளிவூட்டியுள்ளோம்.

இதனை ஏன் நாங்கள் மேற்கொள்கின்றோமென்றால்
கல்முனை மாநகர சபையினால் ஒரு நாளைக்கு திண்ம கழிவு முகாமைத்துவம் செய்ய செலவு
ஏறத்தாழ 435,000 ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.
மாதமொன்றுக்கு சுமார் 13 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வரவு செலவு திட்டத்தில் 70 வீதமானவை திண்ம முகாமைத்துவத்திற்கே செலவாகின்றது அதே போன்று வேறு மக்கள் நலன் செயற்திட்டங்களையும் நடை முறைப்படுத்தி வருகின்றோம்.
இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சட்ட ரீதியான தீர்மானத்தின் படி ஒரு வாரத்திற்கு ஐம்பது ரூபாய் அறவீடு செய்கிறோம் .

சுமார் 125000 பேர் கல்முனை மாநாகரஎல்லைக்குள் வசிக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30000 பேர் கல்முனை மாநகருக்கு வருகை தருகின்றனர்.

 குறைந்த வளத்தின் மூலம் திண்ம கழிவகற்றலை மேற்க்கொள்கிறோம்.
கோரானோ காலத்திலும் கூட பொதுமக்களை தொற்றுநோய்க்ள் மற்றும் டெங்கு நோயிலிருந்து மற்றும் சுகாதாரத்திற்கு கேடாக இருக்கும் இதர  விடயங்களில் இருந்து மக்களை பாதுகாக்க நாங்கள் அர்ப்பணிப்பாக இவ் சேவையை மேற்கொண்டு வருகின்றோம்.

கல்முனை மாநகரை 6 வலயமாகா பிரித்து திண்ம கழிவுகற்றலை முகாமைத்துவம் செய்கிறோம்.
மக்களிடம் தரம் பிரித்து குப்பைகளை செய்து தர வேண்டும் என கோரினோம் ஆனால் அவ்வாறு பொது மக்கள் செய்வதில்லை. இதனால் நாம் தரம் பிரித்து திண்ம கழிவு கொட்டும் இடத்துக்கு கொண்டு சொல்கின்றோம். 

பொதுமக்கள் உங்களின் நலனை கருத்தில் கொண்டு இதனை மேற்கொண்டு வருகின்றோம் அனைவரும் இதற்க்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.