ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீரும், இஸ்லாமிக் புக் ஹவுஸ் (Islamic Book House) இன் முன்னாள் முகாமையாளருமான செய்யத் முகம்மது ஹசரத் அவர்கள் இன்று (03/05/2020) பிற்பகல் ஹெம்மாதகமையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறைவுக்கு சியன ஊடக வட்டம் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.

சியன ஊடக வட்டத்தின் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் அவர்கள், "மர்ஹூம் செய்யத் முஹம்மத் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலான சுவனத்தை வழங்கி வைப்பானாக என்று பிரார்த்திக்கிறேன். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்டு வந்த பாடசாலைகளுக்கிடையிலான "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சிகளை நடாத்தி செல்வதில் முக்கிய பங்களிப்பு செலுத்தினார். நிகழ்ச்சியில் கை தட்டல்களுக்கு பதிலாக தக்பீரை அறிமுகப்படுத்தியவர் மர்ஹூம் செய்யத் முஹம்மத் ஹசரத் அவர்களே. அன்னாருடைய மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

வல்ல நாயன் அன்னாரது அனைத்துப் பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்ற மேலான சுவனத்தை வழங்குவானாக. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.