சுகாதார ஆண்/ பெண் தாதிமாரின் கொடுப்பனவுகளை வெட்டுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் கண்டி வைத்தியசாலையின் முன்னால் (20) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

> இரவு 7 மணிக்குப் பின்னர் போக்குவரத்து வசதிகளை வழங்காமை,
> மேலதிக நேர சம்பளம் உட்பட கொடுப்பனவுகளை வெட்டியமை,
> உத்தியோக ரீதியான அழுத்தங்கள்,
> விடுமுறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும்
> தாதிமார் முகம்கொடுக்கும் வன்முறைகளுக்கு தீர்வு கிடைக்காமை
உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பிரபாத் பலிபான உட்பட தொழில் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

(Hisham Px)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.