"அன்புக்குரியவர்களை இழப்பது எவருக்கும் மிகப்பெரிய சோகமே.  துக்கமும் துயரமும் நிறைந்த இந்த நேரத்தில், பாகுபாடோ பாரபட்சமோ அற்ற முறையில் அவர்களது இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள அனுமதிப்பது நம் அனைவரதும் பொறுப்பாகும்.
அனைத்து மனிதர்களும் சமமாகவே நடாத்தப்பட வேண்டும்" என்று முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதிவிட்டிருந்தார்.

மேலும் "ஒரு மனிதாபிமான சமுதாயத்திற்கு இன்றியமையாத இத்தகைய தார்மீக நெறிமுறைகளையும் விழுமியங்களையும் நிலை நிறுத்த  எம்மால் முடியாது போனால், இனவெறி, ஆழ வேரூன்றிய  இன-மதப் பாகுபாடு, ஓரங்கட்டல் என்பவற்றின் காரணமாக நாம் தோல்வியடைந்த  தேசமாகி விடுவோம்" என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Link - https://twitter.com/sajithpremadasa/status/1258428981923270656?s=19

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.