எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான்,  தனது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
தனது ராஜினாமாக் கடிதத்தை, மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
காத்தான்குடி நகர சபையின் மாதர்ந்த அமர்வில் நேற்று முன்தினம் (14) கலந்துகொண்ட பின்னர் தனது உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக கடந்த ஆண்டு பதவியேற்ற இவர், கட்சியின் தீர்மானத்துக்கமைவாக சுழற்சி முறையில் மற்றொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு, தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.