ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிசறை முகாமை சேர்ந்த கடற்படை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. 
இதுவரை, கொரோனா தொற்றில் இருந்து 232 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 563பேர் வைத்திய சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.