மே மாதத்தில் கொரோனா முடிவடைந்து விடும்
(இஸ்லாமிய வரலாற்றுப் பார்வை)


கொவிட் 19 நோய் பரவலை தடை செய்யும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் புனித ரமழானை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.புனித ரமழான் கூட நம்மை வீட்டில் அடைத்து விட்டதே! பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டிருக்கின்றது என்ற கவலையெல்லாம் தாண்டி இந்த நோய் எப்போது முடியும் என்ற கேள்வி பரவலாக இருக்கின்றது.இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் ,இது இன்னும் எத்தனை மனிதர்களின் உயிரை இலக்கு வைக்கும் ,இலட்சக்கணக்கில் மனிதர்கள் உலகளாவிய அளவில் பழிவாங்கப்பட்டிருக்கிறதே,இந்த கிருமியை ஒழிப்பதற்கு  வேறு வழி இல்லையா? மருந்து இல்லை என்கிறார்கள்.இது எப்போது முடியும் ?யார் முடித்து வைப்பது ?இப்படி நிறைய பேச்சுக்கள்,விவாதங்கள்,சர்ச்சைகள் இது சம்பந்தமாக உலகளாவிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


அல்லாஹ் அவ்வப்போது இதுபோன்ற சில கொள்ளை நோய்களை அனுப்பியிருக்கிறான் .காலங்களில் பல்வேறு உயிர்கள் பழியும் ஆகியிருக்கிறது.ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னால் தானாக போய்விடும்.மருந்து கண்டுபிடித்தாலும் ,கண்டுபிடிக்காவிட்டாலும் ,மனிதர்கள் முயற்சி செய்து போராடினாலும்,போராடவிட்டாலும் தானாக போய்விடும்.இதுவரை வரலாறுகளில் ஏற்பட்டுள்ள கொள்ளை நோய்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தோமேயானால் ஒரு கொள்ளை நோயின் அதிகபட்ச காலம் மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரை அதை தாண்டுவதில்லை ..அவை தாண்டாது என்பதை இவ்வளவு ஊர்ஜிதமாக சொல்வது எப்படியென்றால் கடந்த காலங்களில் வந்த எந்தக் கொள்ளை நோயும் ஐந்து மாதத்திற்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை ,தானாக அந்த கொள்ளை நோயோ,அதன் வீரியமோ,அல்லது வைரஸின் தாக்கமோ ஐந்து மாதங்களில் தானாக முடிவிற்கு வந்துவிடும் என்பது உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள கொள்ளை நோய்களுடைய நியதியாக இருக்கின்றது.அந்த அடிப்படையில் தான் அழுத்தமாக நம்பிக்கை வைக்க முடியும் ஐந்து மாதத்தில் கொரோனாவும் விடைபெற்றாக வேண்டும்.இதை ஒரு பொதுச்சட்டமாகவே சொல்ல முடியும்.அதாவது மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதத்திற்கு மேல் இந்நோய் நீடிக்காது ,இது சம்பந்தமான ஏராளமான ஆய்வு நூல்களை எழுதிய இஸ்லாமிய அறிஞர்கள் நிறைய பேர், அதில் குறிப்பாக அல்லாமா மதாயினி (ரஹ்)அலைஹி,அல்லாமா இப்னு அபித் துன்யா (ரஹ்)அலைஹி,புகாரி ஷரீபினுடைய விரிவுரையாளர் அல்லாமா ஹாபில் இப்னு ஹஜர் அஸ்கலானி ,அல்லாமா இப்னு குதைபா ரஹ்மதுல்லாஹி இவர்கள் எல்லாம் கொள்ளை நோய் குறித்து ஆய்வு ஏராளமான நூல்களை தந்திருக்கிறார்கள்.இவர்கள் சொல்ல வருகின்ற ஒட்டுமொத்த சராம்சமும் எந்த கொள்ளை நோயும் மூன்று மாதம் இருக்கும் அதற்குப் பிறகு வலுவிழக்கத் துவங்கும்.ஐந்து  மாதத்திலே தானாக அது முடிவடைந்து போய்விடும் .ஒவ்வொரு கொள்ளை கொள்ளை நோயிற்கும் ஒவ்வொரு ஆயுள் உண்டு அவை அதைத் தாண்டாது.இது ஒரு காட்டாற்று வெள்ளம் போல் ஆர்பரித்து வரும் பின் தானாக அடங்கிப் போகும் ,தானாக பற்றி எறிந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்றன் மேல் ஒன்றாக படரக்கூடிய தீயை போல இது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்த தீ அணைந்து போய்விடும்.

இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறு நிறைய கொள்ளை நோய்களை பார்க்க முடிகின்றது.நபி முஹம்மத் (ஸல்) அலை அவர்களின் வபாத்தின் பின் சமீபத்தில் ஏற்பட்ட உலகத்தை உலுக்கிய மிகப்பெரிய ஒரு கொள்ளை நோயே காலரா என்பதாகும்.சிரியா தேசத்தின் அமவாஸ் என்ற பிரதேசத்தில் ஏற்பட்டது .முதலில் மிகப்பெரிய கொள்ளை நோய் என்று சொல்லலாம்.இது குறித்து விரிவுத் தகவலை தருகின்ற அல்லாமா இப்னு குத்தைபா அலைஹி (ரஹ்)அவர்கள் தங்களுடைய மஆரிபிலே இவ்வாறு பதிவு செய்துள்ளார்."உமர்(ரழி)அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் சிரியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய கொள்ளை நோயே காலரா ஆகும்.மிகப்பிரபலமான நபித்தோழர்களான அபூ உபைதா இப்னு ஜர்ரா (ரழி)அன்ஹூ ,முஆத் இப்னு ஜபல் (ரழி)அன்ஹூ போன்றோர் இந்நோயினால் வபாத்தானார்கள் .அமவாஸ் என்பது ரமல்லாவிற்கும் பைத்துல் முகத்தஸ்ஸிற்கும் இடையில் உள்ள கிராமத்தின் பெயராகும். இக் கிராமத்தில் இந் நோய் பரவியதால் அதற்கு அமவாஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது.நான்கு ஐந்து மாதங்களில் காலரா இக் கிராமத்தில்  போய்விட்டது.

கொள்ளை நோய்களுக்குரிய கால வரையறை உலகில் முன் ஏற்பட்ட கொள்ளை நோய்களை வைத்துத்தான் வரிசைப்படுத்தியுள்ளார்கள்.அப்துல்லாஹ் இப்னு ஸூபைர் (ரழி)அன்ஹூ அவர்களுடைய காலத்தில் ஒரு காலரா "ஜாரிப்"என்ற பெயர் அந்த கொள்ளை நோயிற்கு .இது பல்லாயிரம் பேர்களை பழி கொண்டது.மூன்று மாதங்களில் அதுவும் போய்விட்டது.ஹஜ்ரி 78ல் ஒரு கொள்ளை நோய் ஏற்பட்டது அதில் வெறும் இளைஞர்களும் ,வாலிபப் பெண்களும் மாத்திரமே வபாத்தானார்கள் இதனால் வாலிபர்களின் கொள்ளை நோய் என்று அழைக்கப்பட்டது..இதில் குழந்தைகளும் இல்லை,பெரியவர்களும் இல்லை.இன்றைய கொரானாவிற்கு நேர்மாற்றமானது.

கூபா,பஸரா,வாஸித்து என்று வரிசையாக மத்திய கிழக்கு பூமியில் பரவியது.இதில் நிறைய தலைவர்கள்,இறந்து போனார்கள் குறிப்பாக அமைச்சர்கள் ,அதிபர்கள்,மிகமுக்கியமான பெருமக்கள் வபாத்தானார்கள் இதனால் "தாஊறுல் அஷராப்"என்று சொல்லி தலைவர்களை ஒழித்த கொல்லை நோய் என்று பெயர் வைக்கப்பட்டது.இதையெல்லாம் தாண்டி நாம் பார்க்கும் போது நபி ஸல் (அலை)அவர்கள் காலத்தில் இருந்து வரிசையாக பார்த்தோமேயானால் எல்லா கொள்ளை நோய்களும் மூன்று மாதம் தொடக்கம் ஐந்து மாதத்திற்குள் துடைத்து எறியப்பட்டது போல அது காணாமல் போய்விட்டது.இது அல்லாஹ்வின் ஏற்பாடு .குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது தானாக காணாமல் போய்விடும் என்பது நியதி .இது குறித்து அதன் வீரியம் ஏன் குறிப்பிட்ட காலத்தில் இழந்து விடுகின்றது என்பதற்கு அறிவியலாளர்களிடம் இன்றுவரை சரியான சூத்திரம் எதுவும் கிடையாது .மாறாக அது தானாக போய்விடும் என்பது வரலாற்று நிகழ்வுகளில் இருந்து பார்க்க முடிகின்றது.


ஹிஜ்ரி 100ல் அதி இப்னு அர்தா என்கிற ஒருவரிடமிருந்து பரவிய காலரா மிகப் பெரிய கொள்ளை நோயினால் ஒரு நாளைக்கு 40000பேர் இறந்தார்கள்.எப்போது முடியும் என்று உலகமே இறைவனிடம் கையேந்திய போது நான்கு மாதத்தில் அவை சரியாகிவிட்டது.இதற்குப் பிறகு ஒரு கொள்ளை நோய் ஏற்பட்டது .அர்ராப் என்பது அதன் பெயர் .இந்நோயினால் முதலில் பாதிக்கப்பட்டவரின் பெயரே இந் நோய்க்கு சூட்டப்பட்டது.ஹிஜ்ரி 127 நபி (ஸல்)அலை அவர்களுடைய வபாத்தின் 115வருடத்தின் பின்னாகும்.இதனால் மிகப்பெரிய சேதம் ஐந்தாவது மாதம் அத்தனையும் அடங்கிப் போய்விட்டது .எல்லாவற்றையும் விட ஹிஜ்ரி 131 ல் ஷஹ்பான் மாதத்தில் ஒரு கொள்ளை நோய் பரவியது.இவை மிகப் பயங்கரமான கொல்லை நோயாகும்.முஸ்லிம் இப்னு குதைபா அந்த கொள்ளை நோய் குறித்த விவரங்களை தருகிறார்.ஒரு நாளைக்கு 70000பேர் சரியாக ஷஹ்பானில் ஆரம்பித்து ரமழான்,ஷவ்வாலில் முடிவடைந்து விட்டது.ஆனால் ஒரு நாளைக்கு 70000பேர் இறந்து போனார்கள் என்றால் மூன்று மாதத்தில் எத்தனை இலட்சம் பேரை அது காவு வாங்கியிருக்கும் என்பது சிந்திக்கக்கூடிய விடயமாகும்.

1200வருடங்களுக்கு முன் இருந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்,வைத்தியர்கள் எல்லாம் கூடிக்கூடி ஆய்வு செய்தார்கள்.அதன்போது நிறைய மருத்துவங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் மூன்று மாதத்தில் அந்த கொள்ளை நோய் தடுக்கப்பட்ட பின்னனியில் கத்தரிப்பு என்ற பூவை தண்ணீரில் கரைத்து குடிக்க சொல்லப்பட்டதுடன் அதன் எண்ணெயை தலைக்கு தேய்க்க சொன்னார்கள்.இதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் குணமடைந்தார்கள்.ஒரு மிகப்பெரிய கொல்லை நோயினை சிறிய மலரினுடைய நீரும் ,எண்ணெயும் உலகத்தை காப்பாற்றியுள்ளதை பார்க்க முடிகின்றது.இப்படியே அரபு நாடுகள் மாத்திரமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் ஏற்பட்ட கொள்ளை நோய்களின் ஆயுட்காலம் மூன்று அல்லது ஐந்து மாதங்களை தாண்டவில்லை.


இந்நிலையில் கொரோனா குறித்த அச்சமும் ,பீதியும் மிக அதிகமாகவே நம் சமூகத்தில் பரவியுள்ளது.அந்த அச்சமும் பீதியும் பல்வேறு நபர்களை மனச்சிதைவிற்கு உள்ளாக்கியுள்ளதை காணலாம்.இதன் ஆயுட்காலம் எனும்போது அது விடைபெறும் காலத்தை நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம்.இறைவன் பேரழிவுகளால் நம்மை காப்பாற்றியிருக்கிறான்.இந்த கொள்ளை நோய்களுக்கெல்லாம் பின்னனியில் எகிப்தின் மிஷ்ர் தேசத்தில் ஹிஜ்ரி 140ல் ஏற்பட்ட மிகப்பெரிய கொள்ளை நோய் அல்லாமா ஹாபில் இப்னு ஹஜர் (ரஹ்)அலைஹி அவர்கள் கொள்ளை நோய்கள் குறித்து குறிப்பாக காலரா,பிளேக் நோய்கள் குறித்து அது ஏற்படுத்திய தாக்கம் ,சிதைவு,அதற்குண்டான நிவாரண வழிகள் என்று பல்வேறு விடயங்களையும் பதிவிட்ட அவர்கள், இந் நோய் ஐந்து மாதம் முழுமையாக இருந்தது.அதாவது ரமழானினுடைய பிற்பகுதியில் தொடங்கி ஸபர் மாதத்தி்ல் முடிவடைந்தது.முடியவே முடியாது என்று உலகில் பேசப்பட்ட நோய்களில் இதுவும் ஒன்றாகும்.அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு சீனாவிலிருந்து பரவியிருக்கின்ற  இந்த கொரோனா டிசம்பர் மாதத்தின் கடைசிகளில் சுமூகமாக தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் ஜனவரியில் அதன் தீவிரம் விரக்கிதியடைந்திருந்தது எனலாம்.எனவே ஜனவரியில் இருந்து கணக்கு வைத்தால் இதுவரை ஏற்பட்ட கொல்லை நோய்களின் ஆயுட்காலம் ஐந்து மாதங்களாகவே இருந்திருக்கிறது.எனவே அந்த அடிப்படையில் ஜனவரி,பெப்ரவரி,மார்ச்,ஏப்ரல்,மே இதற்கு மேல் இந்த கொரோனாவிற்கு உயிர் இல்லை அதற்கு மேல் அதற்கு வீரியம் இல்லை என்பது நிச்சயமானது.


மூன்று மாதத்திலிருந்து ஐந்து மாதத்திற்குள் தான் வைரஸ் தன்னை இழப்பதற்கான காலமாகும்.வைரஸ் இறந்து போக உலகமே கையேந்திக் கொண்டிருக்கின்றது.அந்த இறப்பை எல்லா கொள்ளை நோய்களுக்கும் போலவே அல்லாஹ் இதற்கும் ஆயுளை முடிவு செய்துள்ளான்.எனவே ,நாம் இதனை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் ,இதில் ஏற்படக்கூடிய உயிர் சேதங்களை குறைக்க என்ன செய்ய வேண்டும் ,"ஹெல்யாவில்"பதிவுசெய்யப்பட்டுள்ளதாவது இமாம் ஷாபி (ரஹ்)அவர்களின் கருத்தானது கொல்லை நோய்களுக்கான மருத்துவங்களில் மிக அழகிய மருத்துவம் அல்லாஹ்வுடைய தஸபீஹ்,திக்ர் மற்றும் இஸ்திஹ்பாரும் ஆகும்.ஒருவேளை இறைவன் மனிதகுலத்தை தண்டிப்பதற்காகவே அனுப்பியிருந்தாலும் நிச்சயமாக இஸ்திஃபார் செய்வதிலும் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும் மாத்திரமே இதை ஒழிக்க முடியுமே தவிர மனித குலம் இனி மருந்து கண்டுபிடித்து அனுப்ப முடியாது.மனித குலம் இப்போதும் போராடுகின்றது.எப்படி பரவுகிறது,எப்படி நீக்குவது ,இரத்தங்களை எடுத்து பரிசோதனை செய்கிறார்கள் ,பல்வேறு மூலிகைகள் குறித்து ஒவ்வோர் துறைசார் மருத்துவங்களும் அவரவர் துறைரீதியாக யோசிக்கிறார்கள்.

எனினும் இன்றைக்கு வரையும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை .இக் கொடிய வைரஸை முற்றாக ஒழிப்பதற்குரிய ஆற்றல் பெற்றவன் இறைவன் மட்டுமே.எனவே நாம் இறைவனிடம் பிரார்த்தனைகளை அதிகப்படுத்த வேண்டும்.அல்குர்ஆன் யூனுஸ் (அலை)அவர்களுடைய வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது."அவர் மட்டும் மீனின் வயிற்றில் தஸ்பீஹ் செய்யாவிட்டால் கியாமத் வரையிலும் மீனில் வயிற்றிலே அவர் இருந்திருப்பார் என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே ,இந்த தஸ்பீஹ் தான் இருக்கின்ற நிலையை நீடிக்கச் செய்யாமல் இருக்கின்ற நிலையை துண்டித்து உலகை விட்டு வைரஸை விரட்டியடிக்கும்.கொரானாவினால் பாதிக்கப்பட்ட பிரிட்டனுடைய அதிபர் கூறியதை போன்று "நாம் பூமியில் உள்ள எல்லா முயற்சியையும் செய்து விட்டோம் இனி வானத்தில் உள்ளவன் தான் செய்ய வேண்டும்" என்ற அவரிடையே வார்த்தை அர்த்தமுள்ளது ஆளமானதாகும்.பூமியில் உள்ளவர்களினால் ஒருபோதும் இதைத் துரத்தவோ ,மருந்து கண்டுபிடிக்கவோ முடியாது.இதை அனுப்பி வைத்தவனால் மாத்திரமே இதனை சீர் செய்யவும் முடியும்.எனவே அதிகம் அச்சப்படத்தேவையில்லை ஒட்டுமொத்த சமூகமும் இந்நிலையில் இறைவனிடம் கையேந்துவோம் .கொள்ளை நோய் அதன் நியதியில் ஐந்து மாதத்தோடு முடியட்டும் அகிலம் ஆரோக்கியம் பெறட்டும்.எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்.

 டாக்டர் சதுதீன் பாகவி - சென்னை 

தொகுப்பு - அப்ரா அன்ஸார்
ஊடகவியலாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.