ரிதீகம பிரதேச சபையின்  முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஏ.எச்.எம்.ரிபாய் அவர்கள் இன்றளவும் குருணாகல் மாவட்ட மக்களால் நினைவு கூரப்படுகிறார்கள். 

குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச சபைக்குட்பட்ட பாணகமுவ பிரதேசத்தில் பிறந்த இவர் இரண்டு தசாப்தங்களாக செயற்பாட்டு அரசியலில் இருந்து பிரதேச அபிவிருத்திக்காக பல்வேறு பணிகளை நிறைவேற்றினார். சிங்கள, முஸ்லிம் சமூக ஒற்றுமைக்காக பல்வேறு பணிகளை ஆற்றிய இவர் பிரதேச மகா சங்கத்தினரோடும் நேரடியாக  இணைந்து செயற்பட்டார். 

பாணகமுவ அந்நூர் கல்லூரியை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்துவதில் அர்பணிப்போடு செயற்பட்டார். சிங்கள முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய சேவைகள் இன்றளவும் பாராட்டிப் பேசப்படுகின்றன. 

அன்னார் 2004ம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 06ல் காலமானார்கள். மர்ஹூம் ஏ.எச்.எம்.ரிபாய் அவர்களின் சேவைகளை வல்ல நாயன் ஏற்றுக்கொள்வானாகவும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.