வடமாகாணத்தில் இருந்து தென்பகுதிக்கு வந்து, கொரோனா-வைரஸ் பரவியதை அடுத்து கொழும்பில் தங்க நேர்ந்துள்ளவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தெஹிவளை, ரத்மலான, கல்கிஸ்ஸ ஆகிய இடங்களில் தங்கியிருந்த மக்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலின் போதே இந்த கருத்து வெளியிட்டார். இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமரின் விஜேராம இல்லத்தில் இடம்பெற்றது.
அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.