இந்திய முஸ்லிம்களை தரக் குறைவாக திட்டியும்,அரபுப் பெண்களை அசிங்கமாக விமர்சித்தும்,இஸ்லாத்தையும் அதன் தூதரையும் கொச்சைப்படுத்தி சமூக ஊடகங்கல் வாயிலாக பதிவுகள் வெளியிட்டு தங்களது முஸ்லிம் வெறுப்பினை விஷமாக உமிழ்ந்து வந்த இந்திய பாஷிஷவாதிகளின் ஒவ்வொரு பதிவினையும் தாங்கள் தேடி எடுத்துள்ளதாகவும் அதற்கான விலையை கொடுக்க லொக் டொவுன் முடியும் வரை காத்திருப்பதாகவும் மிகச்சூடாக அமீரக கத்தார் அரசுகள் சார்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது.கர்னாடக பாஜா அமைச்சரான தி. ஜ .ஸ்ரீ சூர்யா எழுதிய ட்வீட் மூலமாக இந்தப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.அமீரகத்தின் வணிகம் மற்றும் சமூக ஆர்வளருமான நூரா அல் குரய்ர் என்பவரது பார்வைக்குக் கிடைத்த தேஜாஸ்வி சூர்யாவின் தரம் குறைந்த ட்விட் குறித்து மறு ட்வீட் எழுதியிருந்த அவர் இந்திய அரசாங்கம் உங்களுக்கு எப்போதாவது அரபு உலக தூதரகப் பணி கொடுத்தால் தயவு செய்து இங்கே பிரவேசித்து விடாதீர்கள் இங்கே வரவேற்கப்படமாட்டீர்கள் .இந்த உங்களுடைய பதிவு எப்போதும் நினைவில் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு முன்னரும் இந்திய முஸ்லிம்கள் குறித்து அவதூராக ட்வீட்களைப் போட்ட பீரீத்தி ங்க்ரீ (Preeti gree) என்பவர் கடந்த 20 வருட காலமாக டுபாயில் தொழில் நடத்தி வருவதை மறந்து ,இஸ்லாமிய நாட்டில் அமர்ந்து என்பதை கொண்டு முஸ்லிம்களைப் பற்றி கேவலமாகப் பேசி வந்துள்ளார் . தே.ஜா .ஸ்ரீ மட்டுமல்ல இந்தியாவைச் சேர்ந்த சரிபாதிப்பேர் பாஷிஷ சிந்தனையுடையவர்களாகும்  . அவர்களில் அரபுலகில் வேலை செய்து கொண்டே முஸ்லிம்களை திட்டி திட்டி வந்துள்ளனர்.ஒன்று இரண்டு அல்ல 800ட்வீட்களும் 1000ற்கும் மேற்பட்ட முகநூல் பதிவுகளும் அமீரக அதிகாரிகளால் துலாவி எடுக்கப்பட்டுள்ள நிலையில் தான் அமீரகத்தின் இந்திய தூதுவர் பவன் கபூர் இந்தியர்கள் பெயரில் போலிக் கணக்கு வைத்து பலர் தங்களை மாட்டி விடுவதற்காக இப்படி செய்துள்ளதாகவும் அமீரகம் சுட்டிக்காட்டிய ட்விட்டர் கணக்குகளும் போலியானது என அவை இரண்டிலும் மோடியுடன் தங்களது படத்தை இணைத்து ஒரே மாதிரியாக வைத்திருப்பதாகவும் மோடிக்கும் ,பா .ஜா.விற்கும் அரபுலகில் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தானிகள் சிலர் செய்யும் சதி என தெரிவித்துள்ளார்.இந்த அசட்டுத்தனமான பதிலை எதிர்பாராத அமீரக அதிகாரிகள் அவரை பிடித்து நய்யப் புடைத்து விட்டனர்.இந்தியாவில்   ஸி.ஏ.ஏ பிரச்சினை நடந்து கொண்டிருந்த காலத்தில் தொடங்கி தாங்கள் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் செய்த பல சங்கிகளின் பதிவுகளை தேடி எடுத்து வைத்துள்ளதாகவும் தாங்கள் கூறியது போன்று அந்த ட்விட்டர் கணக்குகள் எதுவும் போலியில்லை என்பதும் அதில் ஒரு கணக்கு இந்தியாவிலிருந்து இயக்கப்படுவதாகவும் ,மற்றொன்று அதே நபருடைய டுபாய் கணக்கு எனவும் தெள்ளத் தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

கொரோனா தொற்றினை வைத்து இஸ்லாமிய மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியை தீண்டிக் கொண்டிருப்பதை பார்த்து அமீரகம் சும்மா இருக்காது  அனைவரது வேலையும் ,நிறுவனங்களும் பிடுங்கப்பட்டு ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கப்படுவார்கள் எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பிரதமர் மோடியுடன் நின்று கொண்டு படம் எடுத்துக்கொண்டு அதனை முகநூல் சுயவிபரக் கோவையில் பதிவிடுவதால் மட்டும் நாங்கள் அவரை விட்டு விடமாட்டோம் என கத்தார் தூதரகம் சார்பாக வன்மையான கண்டனம் எழுந்துள்ளது.சார்ஜாவில் பெரிய தொழில் அதிபரும் சினிமாத் தயாரிப்பாளருமான ஸோகன் ராய் தான் எழுதிய இஸ்லாமிய வெறுப்புப் ட்வீட்காக மன்னிப்பு கேட்டார்.அதே போல் டுபாயில் ராகேஸ் பாலகிருஷ்ணா நக்கா ஆகிய இரு தொழிலதிபர்களும்  ஸி.ஏ.ஏ போராட்டம் நடத்தப்பட்ட நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் பற்றி அசிங்கமாக எழுதியும் ,முஸ்லிம்களை கழுத்தறித்து கொள்ள வேண்டும் என்று ட்விட் போட்ட காரணத்திற்காக கண்டிக்கப்பட்டணர்.அபூதாபாயி்ல் மிதேஷ் உதேஸி என்பவர் முடிந்தால் முஸ்லிம்கள் மோடியுடன் போருக்கு வரட்டும் என எழுதி பிறகு தவறிற்கு மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினார்.இவர்கள் அனைவரும் சாமானியர்கள் அல்ல இந்திய பா.ஜா.கா அரசியல்வாதிகளின் தயவால் அரபு நாடுகளில் தொழில் துறை ஆரம்பித்து நிறைய பணி நிரப்பும் துறைகளிற்கு CEO க்களாக இருப்பவர்களேயாகும்.இவரது அமீரக குடியுரிமை எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற ஊசலாட்டத்தில் உள்ளது.டுபாயில் பிரபல ஹோட்டல் சமையல்காரர் ஆக இருந்த திரிலோக் ஸிங் என்பவன் முஸ்லிம் பெண்களை நடுத்தெருவில் கற்பழிக்க வேண்டும் ,அவர்களுடைய பிறப்புருப்புக்களை சேதப்படுத்த வேண்டும் என ட்விட் செய்து ஹோட்டல் நிருவாகத்திடம் புகார் அழிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டான்.இவனை போலவே ,அரபுலகில் பிரபல தொழில் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் ஆக இருந்த ஸமீர் பண்டாரி கூடிய விரைவில் அரபுலகக் கருக்கள் அனைத்தும் இந்திய விந்துக்களால் நிரப்பப்படுமென அசிங்கமாக எழுதி மாட்டிக் கொண்டபின் இந்தியாவிற்கே திருப்பியனுப்பப்பட்டான்.

டுபாய் அரச குடும்பத்திற்கு நெருக்கமான தொழில் அதிபரான சௌரவ் உபாதாயா எழுதிய ஒரு ட்விட் தான் இளவரசி ஹிந்த் அல் ஹாசிமி பார்வையிற்கு கொண்டு போகப்பட்டு பெயரளவில் கண்டனத்திற்கு உள்ளானது.உபத்தியாய எழுதிய ட்விட்டில் அமீரக இந்தியர்கள் யாரும் முஸ்லிம் கடைகளில் பொருற்களை வாங்காதீர்கள், அதுபோல ,இந்தியாவில் யாரும் முஸ்லிம்களை ஆதரிக்காதீர்கள் அவர்களுடைய பொருற்களை புறக்கணிப்பீர் என மதவிரோதம் வளர்ப்பது போல் எழுதியிருந்தார்.இதனைப் படித்த இளவரசி ஹிந்த் அல் ஹாசிமி இந்தியா தொழிலாளர்களுக்கும் உணவு ,தண்ணீர் கொடுப்பது எங்கள் மண் இருந்தபடியே எங்களையும் எங்கள் இந்தியா சகோதரர்களையும் புறக்கணிப்பதாக கூற என்ன துணிச்சல் எனக் கேட்டு எச்சரிக்கை விடுத்தார்.அமீரகத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் அசிங்கமாக பேசுவது ,கெட்ட விமர்சணங்களை வீசுவது ,அறுவறுக்கத்தக்க வகையில் படங்களையும்,வீடியோக்களையும் பதிவேற்றி தங்களது பாஷிஷ வெறியை தீர்த்துக் கொண்டிருந்த ஷங் பாண்டிகளுக்கு தற்போது சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை.அமீரக எச்சரிக்கை கிடைத்த அடுத்த நொடியே அது மதவெறி பதிவாளர்களான இந்திய பிரபலங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இப்போது அவர்கள் தங்கள் முகநூல் காலவரிசையில் (timeline)ல் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்து வெள்ளையடித்துக் கொண்டுள்ளார்கள்.முரண்டு பிடித்த பலர் அவர்களுடைய கணக்குகளை முடக்கம் செய்து விட்டு ஓடி விட்டார்கள்.தாமே தவறை துணிந்து செய்து மாட்டிக் கொண்ட பின் அது என் எட்மின், அது  என் பெயரில் உள்ள போலிக் கணக்கு என தெரிவிக்க வேண்டியிருக்கிறது அந்த தவறும் வெளிப்பட்டால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது இதுவே இந்த சங்கிகளின் நூற்றாண்டுக்கால பிழைப்பாகும்.மன்னிப்புக் கடிதம் எழுதி காகிதங்களை சேகரித்தால் அடுத்த நூற்றாண்டிற்கு காகிதம் தயாரிக்கும் மரங்களை வெட்டத் தேவையில்லை எனும் அளவிற்கு மன்னிப்பு தரையில் படுத்து உருண்டுள்ள சங்கிகள் இனியாவது தங்களது மூதாதையர்களின் வரலாற்றைப் படித்து பாடம் படித்துக் கொள்ளட்டும் .இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் மோடி பக்தர்கள் பலரும் தங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கில் பெயர்களை அரபு எழுத்தில் எழுதி வைத்து சீன் போட்டதுதான்.அரபு எழுத படிக்கத் தெரியாத  ஒரு முஸ்லிம் அதைக் கண்டு இவரும் முஸ்லிம் தான் போல என குழம்பட்டும் என அவர்கள் செய்த முட்டாள்தனமான ட்வீட்டினால் இப்போது அவர்களே மாட்டிக் கொள்ள உதவியாய் அமைந்துள்ளது.

இஸ்லாமிய வெறுப்புப் பேச்சை காண்பிப்பதற்காக அரபு நாடுகளில் பல இந்திய வெளிநாட்டினர் தங்கள் சமூக ஊடக பக்கங்களைப் பயன்படுத்தி அவை நீக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவிலும் இவ்வாறான வெறுப்புப் பேச்சு வெடித்துள்ளது .இவ்வாறான இழி செயலை செய்து வருவது ரவி ஹூடா என்பவரே பின்னர் அவர் செய்யும் தொழில் மற்றும் ஒப்பந்தங்களிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.வட அமெரிக்கா நாடான கனடாவில் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் அவரது வெட்கக்கேடான இஸ்லாமிய வெறுப்புப் பேச்சை கண்டித்து பதிலளித்ததை அடுத்து ரவி ஹூடா தனது ட்விட்டர் கணக்கை தனிப்பட்டதாக மாற்றியுள்ளார்.ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இப்தாரின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பாங்கு சொல்லுவதற்கு டொரோண்டோ பகுதி நகராட்சிகள் உள்ளூர் மசூதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது .உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நோயால் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித்களில் ஒன்று கூட முடியாததால் இந்த நடவடிக்கை பரவலாக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் பிரம்டனும் இந்த நடைமுறையை பின்பற்றி பிராந்தியத்தில் உள்ள மஸ்ஜித்களில் பாங்கு சொல்லும் நடைமுறையை அனுமதித்தார் .இதன் பின்னர் தான் ரவி ஹூடா என்பவரின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சு இவ்வாறு அமைந்தது "அடுத்தது என்ன? ஒட்டகம் மற்றும் ஆடு சவாரிகளுக்கு தனி பாதைகள் ,தியாகம் என்ற பெயரில் வீட்டில் விலங்குகளை படுகொலை செய்ய அனுமதித்தல் ,வாக்களிப்பதற்கான முட்டாள்களை திருப்திப்படுத்துவதற்காக அனைத்து பெண்களும் கூடாரங்களில் தலையில் இருந்து கால்வரை தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றவாறு அமைந்தது.ஹூடாவின் ட்வீட் கனடா முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது.உலகளாவிய புகழ்பெற்ற பிராம்பீடனில் உள்ள பீல் மாவட்ட பாடசாலை வாரியம் ,ஹூடாவை பாடசாலை கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள்.அவருக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை கவுன்சில் மற்றும் வேறு எந்த சபையிலும் பங்கேற்க முடியாது எனவும் ,இஸ்லாமிய வெறுப்புப் பேச்சை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது இவை எங்கள் பாடசாலையின் கொள்கையை தெளிவாக மீறுவதாக அமையப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.கனடாவின் சிறந்த ரியல் எஸ்டேட் சந்தைப்படுத்தல் வலைத்தளங்களில் ஒன்றான ரீமேக்ஸ் கனடாவும் ஹூடாவின் ஒப்பந்தங்களை  நிறுத்தியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.ஹூடாவின் கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளவோ ஆதரிக்கவோ இல்லை.அவர் நிறுத்தப்பட்டுள்ளார் இனி ரீமெக் உடன் இணைக்கப்படமாட்டார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்கள்.பன்முகக் கலாச்சாரவாதம் மற்றும் பன்முகத்தன்மை என்பத எங்கள் சமூகங்களில் உள்ள சில சிறந்த குணங்கள் மேலும் நாங்கள் செய்யும் அனைத்திலும் இந்த மதிப்புகளை நிலைநிறுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.பிரம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனும் இஸ்லாமாய வெறுப்புப் பேச்சை கனடாவில் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறினார்.ஹூடா பதிவு செய்யப்பட்ட ,சான்றளிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகரும் ஆவார்.இந் நிலையில் அவரது  இஸ்லாமிய வெறுப்புப் பேச்சு கருத்துக்களின் வெளிச்சத்தில் அவரது உரிமை பரிமுதல் செய்யப்படுமா?என்பதை கனடா அரசு விரைவில் முடிவு செய்யும்.அவர்கள் செய்த ட்வீட் தற்போது அவர்களுக்கே சாவுமணியாக அடிக்கப்பட்டுள்ளதானது வேடிக்கையானது.


அப்ரா அன்ஸார்.
ஊடகவியலாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.