"கலாநிதி சுக்ரி அவர்கள் மறைவுச் செய்தி மனவருத்தத்தை தந்துள்ளது,  புலமைத்துவத்தில் சிறந்த  சுக்ரி அவர்கள் அறிவுலகத்திற்கு பல பங்களிப்புக்களைச் செய்தவர், அதில்  இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான அவரது நூல்கள் மிக முக்கியமானவை, அதிலும் அவரது "Muslims of Srilanka "என்ற நூல் மிகப் பிரபலமானது. இலங்கைத் தீவில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பான எனது ஆய்வுப் பணிகளின்  போது அந்த நூல் மிகச் சிறந்த உசாத்துணையாக உதவி புரிந்தது.

 நான் ஒரு எழுத்தாளராகவும், புலமையாளராகவும் உருவாவதற்கு, கலாநிதி சுக்ரி என்ற ஆளுமையின்  செல்வாக்கு மிகவும் உதவி புரிந்தது,அவரது இழப்பு அனைத்து இலங்கையருக்குமான இழப்பாகும், எமது தாய் நாட்டின் ஐக்கியத்திற்காக சேவையாற்றியதற்காக நாம் அனைவரும் அவருக்கு மரியாதை செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

கலாநிதி ரோஹித தஸாநாயக்க
துறைத் தலைவர்
வரலாற்றுத் துறை 
கலைப்பீடம் 
பேராதனைப் பல்கலைக்கழகம்
20:05:2020

நன்றி - சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.