உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியவர்கள் என்ற வகையில் சில அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு தரப்புகள் தெரிவித்துள்ளன.

காத்தான்குடி, பாலமுனையில் அண்மையில் சஹ்ரான் ஹாசிமின் பெண்கள் பயிற்சி நிலையம் ஒன்றை குற்றப்புலனாய்வுத் துறையினர் சோதனையிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாவனல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரே பாலமுனை பெண்கள் பயிற்சி நிலையத்தை காண்பித்துள்ளார்.

இதனையடுத்து கிடைத்த தகவல்களின்படி குறித்த பயிற்சிகளுக்கு சில அரசியல்வாதிகள் நிதியளித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் தராதரம் பார்க்காது எவராயினும் கைதுசெய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாலமுனை விரிவுரைகளில் பங்கேற்ற பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களும் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை தோப்பூரில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் சஹ்ரானின் ஆயுதப்பயிற்சிகளுக்கு இடம்கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

மாவனல்லையில் இருந்து வந்த சிலர் அங்கு 2017ம் ஆண்டு ஆயுதப்பயிற்சிகளைப் பெற்றதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(தமிழ்வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.