e Passport இற்கு அமைச்சரவை அனுமதி!

Rihmy Hakeem
By -
0

e Passport வழங்கும் நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதனால் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்திற்கு மட்டுமல்லாது பொது மக்களுக்கும் வசதியாக இருக்கும் என்றும் சென்ற மார்ச் மாதத்தில் அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த சமல் ராஜபக்சவால் இது குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)