(மே மாதம் 15ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நக்பா தினத்தையொட்டி இந்த கட்டுரை வெளியாகிறது)
ஒரு சமூகத்தின் தொன்மையான வரலாறுகளும், பாரம்பரிய மரபுகளும் மாத்திரமே அதன் இருப்பை உறுதிசெய்கின்ற விடயங்களாகும். நீண்டகாலமாக எமது பாரம்பரிய அடையாளங்களாக இருந்தவற்றை நாம் பேணிப்பாதுகாப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் தனித்துவம்; இல்லாத தனி அடையாளத்துடன் வாழ்வதற்கான நிலையை இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைஏற்படலாம் நவீன வரலாற்று ஆசிரியர்களின் ஆதங்கமாகும். அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட முக்கிய மற்றும் துன்பகர நிகழ்வாக அரபு இஸ்ரேலிய தோதல் வரலாற்றில் அடைளாப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மாத்திரம் இன்றி முழு உலகினதும் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் என்ற அரசு 1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தினத்தில் இருந்து இந்தப் பிரச்சினை தலை முற்றுப் பெறாத நெருக்கடியா பார்க்கப்படுகிறது.
1948ம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது ஏழு லட்சம் பலஸ்தீன் மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த சம்பவம் வரலற்றில் நக்பா என்று அழைக்கப்படுகிறது.
நக்பா என்ற அரபுச் சொல் பேரழிவு என்ற கருத்தை தருகிறது. நுக்பா என்ற துக்கரமான சம்பவம் இடம்பெற்றமைக்கான வரலாற்று காரணங்களை நாம் இங்கு ஆராய்வது அவசியமாகும். கி.பி 1800ம் ஆண்டுகாலப் பகுதியில் ஐரோப்பாவில் யூத தேசியாவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
கி.பி 1895ம் ஆண்டில் தியட்டர் ஹேர்ஸில எழுதிய The State of the Jews என்ற புத்ததகத்தில் முதல் தடவையாக யூதநாடு ஒன்று முதலில் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஹெர்ஸினால் ஸ்தாபாகர் ஹங்கேரி-ஒஸ்திரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒர் அரசியல் செயற்பாட்டளாவார். ஹெர்ஸில் எழுதிய The State of the Jews என்ற புத்தகத்தில் காணப்படும் அவர் முக்கியமான ஒரு விடயத்தை வலியுறுத்தினார்.
உஸ்மானிய கிலாபத்தின் ஆட்சியின் கீழ் இந்த பலஸ்தீனில் ஒவ்வொரு யூதனும் குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முதலாவது ஸியோனிஸ மாநாடு 1897ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி முதல் 31ம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் பாஸ்ல் நகரில் இடம்பெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 200 யூதப் பிரதநிதிகள் கலந்துகொண்டார்கள். முதல் நாள் கூட்டத்திற்கு தியட்டர் ஹேர்ஸில் தலைமை தாங்கினார். இதில் யூத அமைப்புக்களைச் சேர்ந்த 17 பெண் பிரதிநிதிகளும் கலந்துகொண்டாரகள். மாநாட்டின் 2வது நாள் அதாவது கி.பி 1897ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி சியோனிஸ இயக்கத்தின் இணை ஸ்தாபகரான மெக்ஸ் நொர்டா Max Nordau தலைமையில் இடம்பெற்றது. ஆன்றைய தினதிதில் பால்ஸ் பிரகடனம் வெளியிடப்பட்டது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பான யூதர்களுக்கான நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலாவது ஸியோனிஸ மாநாட்டின் இறுதிநாள் கூட்டத்தில் நான்கு யோசனைகள் முன்வைகப்பட்டதோடு அவை அனைத்தும் எதுவித ஆட்சேபனையும் இன்றி நிறைவேற்றப்பட்டது. யூத இனத்தைச் சேர்ந்த விவசாயிகள், கலைஞர்கள் வர்த்தகர்கள் ஆகியோரை பலஸ்தீனில் குடியமர்த்தல், நாடுகளின் சட்டங்களுக்கு அமை யூதர்களுக்கான சம்மேளனத்தை உருவாக்குதல், யூதர்களின் உணர்வுனை வலுப்படுத்தல், சியோனிஸ இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உரிய அரசாங்களை ஊக்குவித்தல் ஆகிய நான்கு பிரேரணைகளும் 1897ம் ஆண்மு ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்தமாநாடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குதவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியது. இந்த மாநாடு இடம்பெற்ற போது சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் அவர்கள் உஸ்மானிய கிலாபத்தின் சுல்தானாக பணியாற்றினார்.
சுல்தானிடம் யூத நாடொன்றை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை சியோனிஸ அமைப்பின் பிரதிநிதிகள் கோரியிருந்தார்கள் ஆனால் அதனை சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் சியோனிஸ அமைப்பு யூதர்களுக்கான நாடொன்றை அமைக்க மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. யூதர்களை பலஸ்தீனில் குடியமர்த்துவதற்காக அனுமதி கோரி சியோனிஸ அமைப்பின் தலைவர் தியேட்டர் ஹேர்ஸில் 1901ம் ஆண்டு துருக்கி சென்று சுல்தானை சந்தித்தார். பலஸ்தீனில் யூதர்களை குடியமர்த்த 150 மில்லியன் பவுண்களை சுல்தானுக்கு பரிசாகத் தருவதாகக் கூறினார். ஆனால் ஹேர்ஸிலை சந்திக்க சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார். அமைச்சரவை கூட்டி சுல்தான் பின்வருமாறு உரையாற்றினார். "
"பலஸ்தீனை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஹெர்ஸிக்கு அறிவிக்கவும். பலஸ்தீனின் ஒரு பிடி மண்ணை கொடுக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். முஸ்லிம் உம்மத் தனது இரத்தத்தை தண்ணீராக புனித புமியில் தியாகம் செய்திருக்கிறது. யூதர்களின் பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். இஸ்லாமிய கிலாபத் ஒழிக்கப்படும் நாளில் பணம் கொடுக்காமலேயே அவர்கள் பலஸ்தீனை பெற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடுக்கும் போது பலஸ்தீன் துண்டாடப்படுவதை விட எனது உடல் வாளால் வெட்டப்படுவதையே விருகிறேன்." என்று கூறி சியோனிஸ அமைப்பின் பிரதிநிதிகளை நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சுல்தான் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.
ஆனால் இதேகாலத்தில் ஐரோப்பா உட்பட பலநாடுகளில் இருந்த யூத தொழில்சார் வல்லுனர்கள் பலஸ்தீனில் படிப்படியாக குடியேற ஆரம்பித்தார்கள் மறுபக்கத்தில் உஸ்மனிய கிலாபத்தும் சரிவை எதிர்நோக்கியிருந்தது.
1917ம் ஆண்டு அதாவது முதலாம் உலக மகாயுத்தம் இடம்பெற்ற காலத்தில் உஸ்மானிய கிலாபத்தில் கீழ் இருந்த பலஸ்தீன் பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் வந்தது. 1917ம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் ஆர்த்தர் புல்பர் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் இது முழு முஸ்லிம் உலகத்தையும் ஆத்திரம் ஊட்டியது.
பலஸ்தீன் ஆள்புலத்திற்குள் யூத நாடொன்றை உருவாக்க பிரித்தானிய சியோனிஸ அமைப்புக்கு உறுதியளிப்பதாக ஆத்தர் புல்பர் உறுதியளித்தார் 1920ம் ஆண்டு பலஸ்தீனத்தின் League of Nations என்று அழைக்கப்படும் தேசங்களின் சங்கம் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
இதேகாலத்தில் பிரித்தானிய வெளிவிகார அமைச்சின் உதவியோடு அதிகளிவிலான ஐரோப்பிய யூதர்கள் திட்டமிட்ட அடிப்படையில் பலஸ்தீனத்திற்கு அழைத்துச் செல்ப்பட்டு அங்கேயே குடியமரத்தப்பட்டார்கள் இந்தக் காலப்பகுதியிலேயே பலஸ்தீனில் வசித்துவந்த யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்தாக பிரித்தானிய வெளிவகார அமைச்சின் புள்ளிவிபரவியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1922ம் ஆண்டில் பலஸ்தீனில் 83வாயிரத்து 790 யுதர்கள் மாத்திரமே வசித்துவந்தார்கள் ஆனால் இந்த எண்ணிக்கை 1931ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 138 வரை அதிகரித்;தது.1945ல் இநத சனத்தொகை 5 இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து 600 வரை அதிகரித்தது. அதாவது பலஸ்தீனில் 25 வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் யூதர்களின் சனத்தொகை 11 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் வரை அதிகரித்ததாக பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களம் அறிவித்து. பலஸ்தீனை பூர்வீகமாகக் கொண்டிருந்த அரபு முஸ்லிம்களுக்கு ஐரோப்பாவில் இருந்து குடியேறிய யூதர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வந்தன.
இறுதியில் பலஸ்தீன ஆள்புலத்தை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை என்ற தீர்மானத்துடன் 1940ம் ஆண்டில் அங்கிருந்து பிரித்தானியா வெளியேறியது. பிரித்தானியர்கள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பலஸ்தீன் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்றது. 1947ம் ஆண்டு பலஸ்தீனை இரண்டு பகுதிகளாக்கும் திட்டத்தை ஐக்கியநாடுகள் சபை முன்மொழிந்தது.
வரலாற்றில் கூறப்பட்டுள்ளவாறு இரண்டு அரசுகள் உருவாக்கப்படும். இஸ்ரேல் என்ற நாடு யூதர்களுக்காகவும், பலஸ்தீன் என்ற பகுதி அரபுகளுக்காகவும் முன்மொழியப்பட்டது. இதில் யூதர்களுக்கான இஸ்ரேல் என்ற நாடு ஏற்றுக்கொள்ப்பட்டதோடு, அரபுகளுக்கான பலஸ்தீன் என்ற திட்டம் ஐக்கிய நாடுகள் சபையினால் நிராகரிக்கப்பட்டது. இதேகாலத்தில் பலஸ்தீன் மக்களுக்கும் யூதக்குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தது.
1948ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி சியோனிஸ அமைப்பு இஸ்ரேல் என்ற நாட்டை பிரகடனம் செய்தது. ஆனால் எந்த ஒரு அரபுநாடும் இஸ்ரேல் என்ற அரசை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக அரபு நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக யுத்தம் செய்தன இதனால் ஐக்கிய நாடுகள் இஸ்ரேரலுககு வழங்கிவிருந்த 50 சதவீதமான நிலப்பரப்பையும அரபுநாடுகள் கைப்பற்றின. 1948ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் பலஸ்தீன் மக்கள் சனத்தொகையில் பாரிய சரிவை ஏற்படுத்தியது. யுத்ததின் முன்னர் 10 லட்சம் பலஸ்தீன் மக்கள் அந்த பகுதியில் வாழந்து வந்தார்கள்ஃ 1949ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த போது ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பலஸ்தீன் மக்கள் மாத்திரதே எஞ்சியிருந்தார்கள். எனைய அனைத்துவ முஸ்லிகளும் வெளியேற்றப்பட்டார்கள்.
1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி ஜெருஸலம் நகரில் அமைந்துள்ள தியார் அல் யாஸின் கிராமத்திற்குள் நுழைந்த 120 யூத ஆயுததாரிகள் 600 பலஸ்தீன மக்களை கொன்று குவித்தார்கள். 1948ம் ஆண்டில் பலஸ்தீனின் சகல கிராமங்களில் இருந்தும் சொந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1948ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் பலஸ்தீன் மக்கள் சனத்தொகையில் பாரிய சரிவை ஏற்படுத்தியது. யுத்ததின் முன்னர் 10 லட்சம் பலஸ்தீன் மக்கள் அந்த பகுதியில் வாழந்து வந்தார்கள்ஃ 1949ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த போது ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பலஸ்தீன் மக்கள் மாத்திரதே எஞ்சியிருந்தார்கள். எனைய அனைத்துவ முஸ்லிகளும் வெளியேற்றப்பட்டார்கள். 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி ஜெருஸலம் நகரில் அமைந்துள்ள தியார் அல் யாஸின் கிராமத்திற்குள் நுழைந்த 120 யூத ஆயுததாரிகள் 600 பலஸ்தீன மக்களை கொன்று குவித்தார்கள். 1948ம் ஆண்டில் பலஸ்தீனின் சகல கிராமங்களில் இருந்தும் சொந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நாளுக்கு நாள் ஒவ்வொரு பலஸ்தீன் கிராமமும் முற்றுகையிடப்படு தாக்கப்பட்டது. அங்கிருநது முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே இடத்தில் யூதர்கள் குடியமர்த்ப்பட்டார்கள். 1948ம் ஆண்டு ஜூலை மாதம் ரமல்லாஹ் நகரில் இருந்து 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டார். லைதா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
இஸ்ரேல் பிரமதராக இருந்த யிட்ஸாக் ராபினின் வழிகாட்டலுக்கு அமைய இந்த இன சுத்தீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற அன்று வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றும அரபுநாடுகளின் முகாம்களின் மூன்றாவது தலைமுறையனாராக முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். பலஸ்தீன மக்கள் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நக்பா சம்பவத்தை இன்றும் நாம் கண்ணீர் துளிகளால் எழுதப்பட்ட வரலாறாக நாம் வாசித்து வருகிறோம்.
அல்லாஹ்தஆலாவினால் அருள்செய்யப்பட்ட பூமி சொந்த மக்களிடம் சென்றடைய நாம் அவனிடம் பிரார்த்திப்போம்
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.