19 ஆவது திருத்தச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 19 ஆவது திருத்தச் சட்டம் நாங்கள் 2015 ஆம் ஆண்டு புதிய ஆட்சியை ஏற்படுத்திய போது ஒரு முதற்படியாவே செய்யப்பட்டது.

அது அந்த திருத்தம் நிறைவேற்றப்பட்ட போதே இது ஒரு முதற்படியாகவே செய்யப்படுவதாகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டிருந்தது.

முதற்படியாக நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்ந்து நாட்டின் சட்டமாக இருக்க முடியாத ஒரு விடயம்.

ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து இணங்காவிட்டால் இது இயக்க முடியாத ஒரு அரச பொறிமுறையாக இருக்கும். அதனால் அது மாற்றப்பட வேண்டும்.

ஆனால் எந்த திசையில் மாற்றப்பட வேண்டும் என்பதே கேள்வி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அததெரண 
Blogger இயக்குவது.