2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இல், இந்தியாவுடனான
இறுதிப் போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 இறுதிப் போட்டியில் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான இயலுமை இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்காக அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுவதாக கூறுவதாக தெரிவித்ததுடன், இது தொடர்பில் விவாதத்தில் ஈடுபடவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் வீரர்களை இணைத்துக் கொள்ளவில்லை எனவும் ஒரு சில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும்  மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

Blogger இயக்குவது.