தேர்தல் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் மாநாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல்  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய  இடம் பெறும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்செயலாளர்  சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய உற்பத்தியை மேம்படுத்தல், தேசிய   பாதுகாப்பு  மற்றும்  அனைத்து இன மக்களையும் பிரநிதித்துவப்படுத்தும்  நிலையான அரசாங்கம் ஆகிய  விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொதுஜன பெரமுன தேர்தலை எதிர்க் கொள்ளும். அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான அரசாங்கம் மக்கள் தெரிவின் ஊடாக ஸ்தாபிக்கப்படும்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை தவிர ஏனைய  மாவட்டங்களில் பொதுஜன பெரமுன  சார்பில் 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்க்ள்.
இதனப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 22 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 21 பேரும்,   குருநாகல் மாவட்டத்தில்  18 பேரும்   ,கண்டி மாவட்டத்தில் 15 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும், பதுள்ளை மாவட்டத்தில் 12 பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 12 பேரும், காலி மாவட்டத்தில் 12 பேரும், கோகாலை மாவட்டத்தில் 12 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 11 பேரும்,
மாத்தறை  மாவட்டத்தில் 19 பேரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10பேரும், திகாமடுல்லை மாவட்டத்தில் 10 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 09 பேரும், வன்னி மாவட்டத்தில் 09 பேரும், மாத்தளை,  மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் 08 பேரும் திருகோணமலை மாவட்டத்தில்  07 பேரும் ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன சார்பில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் ஊடாகவும் பலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

எதிர்வரும்  ஜூன் மாதம் தொடக்கம் தேர்தல் பிரச்சார மாநாடுகள்  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி நடத்தப்படும். மாநாடுகளை பாதுகாப்பான முறையில் நடத்தும் பொறுப்பு தொகுதி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

Virakesari 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.