இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சுமார் 45 000 தபால் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் தெளிவாக இல்லை.

இதன் காரணமாக இவற்றை உரியவர்களுக்கு விநியோகிக் முடியாதிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இணைய தளம் கொள்வனவு செய்யப்பட்டு தபாலில் சேர்க்கப்பட்ட பொதிகளை தபால் திணைக்கள ஊழியர்கள் கையாடியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த எண்மையுமில்லையெனறும் அவர் தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

 அஞ்சல் திணைக்களம்

2020.06.18

தபால் திணைக்களத்திற்கு மலேஷிய தபால் நிர்வாக பிரிவின் மூலம் கிடைத்துள்ள கடிதங்களின் முகவரிகள் தெளிவின்மை

இணையதளங்கள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தமது பொருட்கள் தமக்கு தபால் மூலம் கிடைக்காததன் அடிப்படையில் பல்வேறு தரப்பினரால் தபால் திணைக்களத்திடம் அடிக்கடி விசாரித்து வருகின்றனர். மார்ச் மாத இறுதி வாரம் தொடக்கம் இது வரையில் சர்வதேச விமானங்கள் முறையான வகையில் சேவையில் ஈடுபடாத அடிப்படையில் பெரும்பாலான நாடுகளிலிருந்து கிடைக்க வேண்டிய தபால் மூலமான பொருட்கள் இலங்கைக்கு கிடைக்காமை இந்த தாமதத்திற்கு காரணமாகும். 

இருப்பினும் பெரும்பாலான இணையதளங்களில் தபால் ஊழியர்களினால் இந்த பொருட்கள் திருடப்படுவதாக குற்றம் சுமத்தி குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்.
இணையதளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களினால் பொருட்களை விநியோகிப்பதற்காக சம்பந்தப்பட்ட பொருட்கள் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதையடுத்து அவர்களது இணையதளங்களில் அந்தப் பொருட்கள் குறிப்பிட்ட இலக்குகளில் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும் அந்த பொருட்கள் விமான நிறுவனங்களில் இருப்பதுடன் இந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

இலங்கை பாவணையாளர்களினால் ஈ - வர்த்தக மூலம் பல்வேறு இணையதளங்கள் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள தபால் மூலமான பொருட்களைக் கொண்ட கொள்கலன் ஒன்று மலேஷிய தபால் நிர்வாகத் தினால் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆவது வாரத்தில் இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன் மூலம் பொதுவான தபால் மூலம் சேர்க்கப்பட்ட சிறியளவிலான சுமார் 45 000 பொதிகள் உள்ளடங்கியிருப்பதுடன் கொவிட் 19 தொற்று பரவுவதற்கு முன்னர் இவை மலேஷிய தபால் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் விமான சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய காலப்பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கை தபால் நிர்வாகத்திடம் சேர்க்கப்பட்டுள்ளது. 

3 மாத காலத்திற்கு (03) மேற்பட்ட காலம் தாமதத்துடன் இந்நாட்டுக்கு கிடைக்கும் பொழுது பொருட்களின் முகவரிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் குறைபாட்டினால் அந்த முகவரிகளை வாசிக்க முடீயாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த பொருட்களில் முகவரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 5000 பொருட்கள் தெரிவுசெய்யப்பட்டு இலக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பொருட்களை விநியோகிப்பதற்கு அதில் அடங்கியுள்ள பார் கோட் இலக்கத்தைப் பயன்படுத்தி முகவரியை வழங்குமாறு மலேஷிய தபால் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதுடன் இந்த முயற்சி தோல்வியடையுமாயின் இந்த பொருட்களை மலேஷிய தபால் நிர்வாகத்திடம் ஒப்படைத்து உரிய முகவரிகளுடன் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலுக்கு அமைவாக ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிலைமைக்கு மத்தியில் ஏற்படும் தாமதம் இலங்கை தபால் திணைக்களத்தின் நிர்வாகத்திற்கு அப்பாலான விடயமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த தபால் மூலமான பொருட்களின் உரிமையாளர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் செயல்படுமாறு மலேஷிய தபால் நிர்வாகத்தை நாம் கோரியுள்ளோம்.

ரஞ்சித் ஆரியரத்ன
தபால் மா அதிபர்
Blogger இயக்குவது.