இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் விசேட பொலிஸ் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

அப்போதைய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி பணத்திற்காக விட்டுக் கொடுக்கப்பட்டதாக, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஜூன் 24ஆம் திகதி நவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகத்தில் வைத்துஇ குறித்த பொலிஸ் குழுவினால் வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

அத்துடன் இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே 6 பக்க முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.