முழு உலகையும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா நோய் தொற்று காரணமாக இம்முறை ஹஜ் கடமையை சவூதி அரேபியாவுக்குள் மட்டுப்படுத்தவும் வெளிநாட்டவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்காமல் இருக்கவும் சவூதி அரேபியா தீர்மானித்துள்ளதாக சவூதி ஹஜ் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இம்முறை ஹஜ் கடமையை சவூதி அரேபியாவுடன் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை சவூதி பிரஜைகள் மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.