2020 பொதுத்தேர்தல் நடாத்தப்படும் திகதி இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்றும் ஆணைக்குழுத்தலைவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,  ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில் ,தேர்தல் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை சட்டமாக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பளார் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
உலக சுகாதார ஸ்தாபன உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ சங்க உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
பொதுத் தேர்தலை பிரச்சினையற்ற வகையில் நடத்துவது ஆணைக்குழுவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்கான செலவு குறித்து கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் .கொரோனா வைரஸ் தாக்கத்தின் முன்னர் தேர்தல் சேலவு சுமார் 700  கோடி ரூபாயென மதிப்பிடப்பட்டது.. தற்போது சுகாதார வழிகாட்டலுடன் நடத்துவதற்கு 900 கோடி ரூபா செலவாகக்கூடும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.