இருபத்தி நான்காவது தொடர்.................

முஸ்லிம் இளைஞர்களை போராட தூண்டியது எது ? அல்-கொய்தாவின் பிளவும், அரபு வசந்தமும்.


உலக ஊடகங்களில் பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட எந்தவொரு இஸ்லாமிய போராட்ட இயக்கங்களும் தானாக விரும்பி உருவாகவில்லை. அவர்கள் சூழ்நிலை காரணமாக உருவாக்கப்பட்டார்கள்.

முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு முழு மத்தியகிழக்கு நாடுகளையும் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், அங்குள்ள எண்ணை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், இஸ்ரேலை பாதுகாப்பதற்காகவும் இஸ்லாமிய நாடுகளில் தங்களது முப்படையினர்களையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்காவுக்கு எங்களது நாட்டில் என்ன வேலை ? அவர்கள் இங்கு ஏன் வரவேண்டும் ?

எங்களது பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். அமெரிக்க படைகள் இஸ்லாமிய மண்ணைவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய இயக்கங்களின் உருவாக்கத்துக்கும், போராட்டத்துக்குமான முதன்மைக் காரணமாகும்.

அமெரிக்க படைகள் மத்தியகிழக்கு நாடுகளில் இராணுவத்தளம் அமைக்கவில்லையென்றால் முஸ்லிம் இளைஞ்சர்கள் இவ்வியக்கங்களில் பெருமளவில் இணைந்திருக்க மாட்டார்கள். அதனால் போராட்டம் வலுவடைந்திருக்காது.

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு முன்பு ஐ.எஸ் போன்ற ஆயுத இயக்கங்கள் இருந்ததுமில்லை, இவ்வாறான போராட்டங்களும், அவலங்களும் ஏற்பட்டதுமில்லை. அமெரிக்க படைகள் இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமித்ததுதான் பல முஸ்லிம் இளைஞ்சர்களை போராட்ட களத்துக்கு செல்ல தூண்டியது.

சதாம் மரணமடைந்த பின்பு ஈராக்கில் போர் ஓயவில்லை. பரவலாக யுத்தம் தீவிரமடைந்துகொண்டே இருந்தது. அபூபக்கர் அல்-பக்தாதி தலைமையிலான அல்-கொய்தா இயக்கம் மிகவும் மூர்க்கமான தாக்குதலில் ஈடுபட்டது.

இவர்களின் அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களினால் அமெரிக்க படைகள் பெருமளவில் கொல்லப்பட்டனர். அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட ஈராக்கிய பொம்மை அரசும் பெயரளவிலேயே இயங்கியது. நாளாந்தம் அல்-கொய்தா இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் நிலப்பரப்பு அதிகரித்தது.

இதற்கிடையில் அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது அமெரிக்காவின் “ஷீல்” படைப்பிரிவின் அதிரடித்தாக்குதலினால் 2011.05.01 நல்லிரவு வேளையில் கொல்லப்பட்டார்.

இவரது மறைவுக்கு பின்பு அல்-கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக அய்மன் சவாகிரி அவர்கள் தெரிவானார். ஒசாமாவின் மறைவுக்கு பின்பு அல்-கொய்தா இயக்கத்துக்குள் உள்ளக முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் அவைகள் வெளியே வரவில்லை.

அய்மன் சவாகிரியின் தலைமைத்துவத்தின் கீழ் சிறுது காலங்கள் மட்டுமே அபூபக்கர் அல்-பக்தாதி தலைமையிலான ஈராக்கிய கிளையினர் செயல்பட்டனர். பின்பு அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துசென்று ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற “இஸ்லாமிய ஸ்டேட் ஒப் ஈராக் அண்ட் சிரியா” என்னும் பெயரில் தனித்து செயல்படுவதாக அறிவிப்பு செய்தனர்.

இந்த காலகட்டத்தில்தான் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடாத்திவந்த இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக அவர்களது ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 2011 இல் துனுசியாவில் அரபு வசந்தம் என்னும் மக்கள் புரட்சி ஆரம்பமானது.

அதில் ஏற்பட்ட வெற்றியையடுத்து எகிப்து, லிபியா என தொடர்ந்துசென்று பின்பு சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக தீவிரமடைந்தது. அதுதான் முடிவில்லாததும், வெற்றிபெற முடியாததுமான பெரும் போராக இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

2011 க்கு பின்பு ஈராக்குக்கு பொறுப்பான அபூபக்கர் அல்-பக்தாதி தலைமையிலான அல்-கொய்தா இயக்கத்தின் போர் நடவடிக்கைகள் சிரியாவிலும் விஸ்தரிக்கப்பட்டது.

சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாத்தின் படையிலிருந்த FSA (Free Syrian Army) என்னும் சுன்னிப்பிரிவு இராணுவத்தினர் பிரிந்துசென்று ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டு அதன் கலீபா அபூபக்கர் அல்-பக்தாதியிடம் பையத்து செய்தனர்.

FSA யினரின் இணைவுக்கு பின்பு சிரியாவில் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போரிட்ட வேறு சில இஸ்லாமிய குழுக்களும் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டு அபூபக்கர் அல்-பக்தாதியிடம் பையத்து செய்தனர்.

இதனால் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு மிகவும் பலமடைந்ததுடன். சிரியாவினதும், ஈராக்கினதும் பெரும் நிலப்பரப்புக்களை கைப்பேற்றி அவைகளை ஒன்றாக இணைத்து பதினாறு மாகாணங்களாக உருவாக்கி அதனை “இஸ்லாமிய தேசம்” என்று பிரகடனப்படுத்தினார்கள்.

அத்துடன் உலகில் உள்ள முஸ்லிம்களை இஸ்லாமிய அரசிடம் பையத்து செய்யுமாறும் வலியுறுத்தியதுடன், உலகில் பாதுகாப்பில்லாமல் வாழுகின்ற இஸ்லாமியர்களை இஸ்லாமிய தேசத்துக்கு வந்து குடியேறுமாரும் (ஹிஜ்ரத்) ஐ.எஸ் இயக்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்..........................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.