மின் கட்டண பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் அமைச்சரவை தீர்மானத்தின் படி எடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள கடந்த மாதங்களுக்கான மின் கட்டண பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மின் கட்டணங்கள் எந்தவிதத்திலும் நியாயமானவை அல்ல என மின் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த வீடுகளில் பயன்படுத்தப்பட்ட அலகுகளுக்கு அமைய மின் கட்டண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தாம் அமைச்சரவைக்கு விடயங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அதன்பின் அமைச்சரவையின் தீர்மானத்தின் படி மின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (3) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.

தற்போது மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்காக மின் நுகர்வோர்களிடம் இருந்து அறவிட வேண்டியுள்ள மின் கட்டணத் தொகை 2000 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஜூன் மாதத்தின் பட்டியலில் 90 சதவீதம் தற்போது நுகர்வோரினால் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.