பிரித்தானிய இளவரசி டயானாவின் வாழ்க்கையை பிரதிபலித்து தயாரிக்கவுள்ள ஹொலிவூட் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில், அமெரிக்காவின் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இளவரசி டயானாவின் திருமண வாழ்க்கை  மற்றும் அது  முறிவடைந்தமையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக,  வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

'ஸ்பென்சர்'  என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில்,  இளவரசி டயானாவின்  வேடத்தில் பங்கேற்று நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமையானது, தனது வாழ்க்கையில் பெரும் பாக்கியமாகும் என, கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

30 வயதான கிறிஸ்டன், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ட்வலைட், த ட்வலைட் சாகா, ஒன் த ரோட், அண்டர்வோட்டர் போன்ற திரைப்படங்களை அவரது நடிப்பை பறைசாற்றும் படங்களாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.