(ரிஹ்மி ஹக்கீம்)

ஐக்கிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான பிரதான காரியாலயம் நேற்றைய தினம் (16) நீீீீீர்கொழும்பு நகரில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான ரஞ்சன் ராமநாயக்க, டாக்டர் காவிந்த ஜயவர்தன, ஹர்சண ராஜகருணா, சீராஸ் மொஹமட், சசி குமார், சரணலால் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி சுமார் 100 பேருக்கு இந்நிகழ்வு வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Blogger இயக்குவது.