பொலன்னறுவை மாவட்டத்தில் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் வைபவம் நடைபெற்ற பொலன்னறுவை புத்தி மண்டபத்திற்கு இன்று முற்பகல் சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வைபவம் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய நடவடிக்கை என அங்கு சென்றிருந்த தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததை அடுத்தே அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மண்டபத்தில் இருந்து வெளியேறும் முன்னர் மேடையில் இருந்து கீழே இறங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
இந்த வைபவம் சட்ட விதியை மீறும் செயல் என தேர்தல் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தான் சட்டத்தை மதிக்கும் நபர் என்பதால் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கவில்லை எனவும் தேர்தலின் பின்னர் அவற்றை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

(ஸ்டீபன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.