கி.பி 1505ம் ஆண்டில் இலங்கைக்கு போர்த்துக்கேய தளபதி லோரன் சோ தி அல்மைதா Lourenço de Almeida
வருகை தந்தார். அன்று முதல் கி.பி 1948 வரை இலங்கை ஐரோப்பியரின் காலனியாக இருந்தது.  தளபதி லோரன் சோ தி அல்மைதா போர்த்துக்கல் நாட்டின் அல்மைதா என்ற ஊரை சேர்ந்தவர். 

அல்மைதா என்ற ஊர் போர்த்துக்கல் நாட்டின் முக்கிய நகரமாக இருந்தாலும் அது நீண்டகாலமாக ஸ்பெய்ன் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஸ்பெய்ன் முஸ்லிம்கள் இந்த இடத்தை அல் மாயிதா என்று அழைத்து வந்தார்கள். இன்றும் இந்த ஊ் அல்மாயிதா என்றே அழைக்கப்படுகிறது. அல்மாயிதா என்பது சமவெளி அல்லது பீடபூமி என்பது அர்த்தமாகும்.

ஸ்பெய்ன் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருந்த போர்த்துக்கல் நாட்டின் அல்மாயிதா என்ற ஊரில் பிறந்தவர் தான் இலங்கையை கைப்பற்றிய லோரன் சோ தி அல்மைதா ஆவார். தளதபதி லோரன் சோ பின் சேர்க்கப்பட்டிருப்பது அவரது ஊரின் பெயராகும்.

🖊பஸ்ஹான் நவாஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.