தர்கா நகர் பகுதியில் 14 வயதான மாற்றுத்திறனுடைய சிறுவனான தாரிக் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில்
பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த மே 25ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் இராஜாங்க அமைச்சர்  அலிசாஹிர் மௌலானா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


குறித்த சிறுவனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.
அதன் பின்னரே அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலி சாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

மேலும் தர்கா நகர் தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, அலி ஸாஹிர் மௌலானாவின் ட்விட்டர் பதிவுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.


வீடியோ இணைப்பு - https://twitter.com/alizmoulana/status/1268400603363004416?s=20

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.