மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 9ம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்குள்ள புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம், அதன் அருகில் உள்ள ஓட்டலில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

14 நாட்கள் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்றில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள். அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறார்கள்.

இந்தத் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள 30 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வீரர்கள் மற்றும் அணியுடன் செல்லும் அதிகாரிகள் என அனைவருக்கும் சவுத்தாம்ப்டனில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.

இங்கிலாந்து -  மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8ம் திகதி ஆரம்பிக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.