தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று நாடு திரும்பி மீண்டும் தொழிலுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் பணியாளர்கள், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பிய பணியாளர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெருமளவானோர் நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7,000 தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.