பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாண  தமிழ் பேசும் மக்களின் காணிகளை சூட்சுமமாகச் சுவீகரிக்கும் ஜனாதிபதி செயலணிக்கு எதிராக, காரைதீவு பிரதேச சபையில் கண்டன பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மேற்படி செயலணியில், தமிழ்பேசும் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படாமை குறித்தும் கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச சபையின் 28ஆவது மாதாந்த அமர்வு, தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், இன்று (11) கூடியபோதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் பிரேரணையைச் சமர்பித்துரையாற்றுகையில், கிழக்கில் 248 ஏக்கர் காணியை, தொல்பொருள் என்ற ரீதியில் அபகரித்து, பௌத்த பூமியாக்க சதி நடக்கிறதெனத் தெரிவித்தார்.
இறுதியில் இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில், ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டமைக்கு தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.