வரக்காபொல நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி வங்கியில் கொள்ளை போன சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் இன்று (22) அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 02ஆம் திகதி இரவு வேளையில், குறித்த வங்கியிலிருந்து 18 இலட்சத்து 66 ஆயிரத்து 843 ரூபா பணமும், 28 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, கேகாலை பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எடேரமுல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.