இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் நாளை (16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் முதற் தடவையாக கூடவுள்ளனர்.

இதன்படி நாளை கூட்டத்தில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அதேபோல் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தேர்தல் ஒத்திகை நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளது.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.