சில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக நாளை (08) தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி , ஏ.சி பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று பொலநறுவை ரயில் நிலையத்திற்கும் கொழும்பு - கோட்டைக்குமிடையில் சேவையில் ஈடுபடும் புளத்திசி ரயிலும் யாழ்பானத்திற்கும் கோட்டைக்கும் இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயிலும் சேவையில் இடம்பெறாது.
இதேபோன்று தேநுவர மெனிக்கே என்ற ரயிலும் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கு கோட்டைக்குமாக சேவையில் ஈடுபடும் ரயில் மாத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடமாட்டாது.
திங்கட்கிழமை தொடக்கம் பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து காலை 4.30க்கு சேவையில் ஈடுபடும் தெற்கு அதிவேக நகரங்களுக்கிடையிலான ரயிலும் இந்த ரயில் நியைத்தில் இருந்து காலை 4.40க்கு மருதானை ரயில் நிலையத்திற்கிடையில் சேவையில் ஈடுபடும். மாத்தறை ரயில் நிலையத்தில் அதிகாலை 3.15 மணிக்கும் காலி ரயில் நிலையத்தில் காலை 5.20மணிக்கும் ஹிக்கடுவ ரயில் நிலையம் வரையிலும் 5.20 மணிக்கு மருதானை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடும்.
அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.