நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிற்றுண்டிக்கு பொறுப்பாக இருந்த சிறை காவலாளி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கைதி ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் சிம் அட்டை வழங்கியமை தொடர்பிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறை காவலாளி மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.