கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து இன்று (12.06.2020) காலை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 64 வயதுடைய ராஜிவ ஜயவீர என்ற நபர் எனவும் அவர் முன்பு Sri Lankan Airlines இல் சிரேஷ்ட முகாமையாளராக பணிபுரிந்தவர் எனவும், Colombo Telegraph இணையத்தில் பல கட்டுரைகளை எழுதியவர் என்றும், Sri Lankan Airlines இல் இடம்பெற்ற ஊழல்கள்  குறித்தும் அவர் எழுதி வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த நபரின் சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.