அண்மையில் கருணா அம்மான் தெரிவித்த கருத்து அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது உண்மையா என்று ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

1991, 1997, 1998 ஆகிய காலகட்டங்களில் ஆனையிறவு இராணுவ தளத்தினை கைப்பெற்றுவதற்கு புலிகள் இயக்கத்தினர் பெரும் தாக்குதல் நடாத்தியும் அதனை கைப்பேற்றும் முயற்சியில் தோல்வியடைந்தனர்.

இறுதியாக விடுதலை புலிகளின் “மூன்றாவது ஓயாத அலைகள்” என்ற பெயரில் 2000.03.26 அன்று மாலை ஆனையிறவு படைத்தளத்தின்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. ஓயாத தொடர் தாக்குதலினால் 36 நாட்களின் பின்பு தளத்தினை விடுதலை புலிகள் முற்றாக கைப்பேற்றினர்.

தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு இராணுவ தளத்துக்கு செல்லும் பிரதான நீர் விநியோகத்தை புலிகள் தடை செய்திருந்தார்கள். இதனால் குடிப்பதற்கு நீர் இல்லாமல் பல இராணுவத்தினர் மரணித்தனர்.

ஒரு மாதத்தையும் தாண்டிய புலிகளின் தொடர் தாக்குதலினால் தளத்தின் பல முனைகளை இழந்த இராணுவத்தினர், மேற்கு பக்கமாக ஆழமில்லாத கடல் வழியாக மண்டைதீவை நோக்கி தப்பிச்சென்றனர். அவ்வாறு செல்லும்போதும் பல இராணுவத்தினர் இறந்தனர்.

இந்த படை நடவடிக்கைக்காக விடுதலை புலிகளின் முக்கிய முன்னணி தளபதிகள் உட்பட தங்களது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி சுமார் நாலாயிரம் போராளிகள் களமிறக்கப்பட்டனர்.

ஆனையிரவு தளத்தினையும், அதனை சுற்றியிருந்த முகாமிலும் இருபதாயிரம் தொடக்கம் நாற்பது ஆயிரம் வரையிலான இராணுவத்தினர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறான ஒரு தளத்தினை தாக்கி அழிப்பதென்றால் கருணா கூறியதுபோன்று வெறும் தளபதி ஒருவரின் தலைமையில் போராளிகள் சென்று தாக்குதல் நடாத்துவதில்லை.

ஒரு தளத்தினை கைப்பெற்றுவதற்கு முன்பு அந்த தளத்தின் உள்ளக கட்டமைப்பு பற்றிய முழுமையான தகவல்களை புலனாய்வு துறையினர் திரட்ட வேண்டும். அவ்வாறு திரட்டுவதற்கு பல வருடங்களும் செல்லலாம்.

திரட்டப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கு அமைவாக புலிகளின் தலைவர் பிரபாகரன் தாக்குதல் திட்டத்தினை வரைவார். பின்பு அந்த திட்டத்தினை தளபதிகளுக்கு விளக்குவார்.

இதற்காக ஒவ்வொரு பொறுப்புக்கும் மற்றும் ஒவ்வொரு முனைக்கும் ஒவ்வொரு தளபதிகளை நியமிப்பதுடன் அதனை ஒருங்கிணைப்பதற்காக ஒட்டுமொத்த கட்டளை தளபதியை நியமிப்பார்.

அவ்வாறு ஆனையிரவு தளம் மீதான தாக்குதலுக்கான ஒருங்கிணைக்கும் கட்டளை தளபதியாக கருணா அம்மான் நியமிக்கப்பட்டார்.

கட்டளை தளபதி எப்போதும் இராணுவத்தின் துப்பாக்கி வீச்செலைக்கு அப்பால் பாதுகாப்பான இடத்திலேயே அமர்ந்திருப்பர். கட்டளைத் தளபதியாக நியமிக்கப்படுபவர் சரியாக கட்டளைகளை வளங்குகின்றாரா என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவதானித்துக்கொண்டிருப்பார்.

அவ்வாறு கட்டளை வழங்குவதில் தவறுகள் நடைபெற்றால் உடனே அதனை மாற்றம் செய்யும்படி பிரபாகரன் கட்டளை தளபதிக்கு பணிப்புரை வழங்குவார். சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டத்தை மாற்றும்படியும் தளபதிக்கு தலைவர் கூறுவார்.

அத்துடன் இந்த தாக்குதல் திட்டத்துக்கு திரட்டப்பட்ட போராளிகளுக்கு தாக்குதல் ஒத்திகை பயிற்சிகள் வேறு பக்கத்தில் நடைபெறும். ஆனால் தாங்கள் எந்த இலக்கை தாக்கப்போகிறோம் என்பது இறுதியில்தான் போராளிகளுக்கு தெரிவிக்கப்படும்.

எனவே ஆனையிறவு மீதான தாக்குதலின்போது ஒரு இரானுவத்தினரையாவது சுடுவதற்கு கட்டளை தளபதி கருணாவுக்கு சந்தர்ப்பம் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தமிழ் மக்களை காப்பதற்காக இராணுவத்தை கொன்ற வீரன் என்று தன்னை காண்பிப்பதன் மூலம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அவ்வாறு கூறினாரேயன்றி வேறொன்றுமில்லை.

இந்த உண்மை அரச தரப்புக்கு தெரியாமலுமில்லை. சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்கு அரச தரப்பு கருணாவை விசாரிப்பதுபோன்று நாடகமாடுகின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.