பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 18 திகதி அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தாக செயலகம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வெளியிடுதல் மற்றும் அவற்றை அஞ்சலுக்காக கையளித்தல் ஆகிய பணிகள் எதிர்வரும் ஜூன் 30 ஆம் மற்றும் ஜூலை முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஜூலை மாதம் 14,15 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதேச செயலகங்கள், தேர்தல்கள் செயலகம், பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சுகாதார பிரிவினர் வாக்களிக்க ஜூலை மாதம் 16, 17 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க தவறும் அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதம் 20, 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் முறைப்பாடுகளை விசாரிக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.